சாம்பார் சாதம்

தேதி: April 16, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.7 (3 votes)

 

அரிசி - 1/4 கிலோ,
துவரம் பருப்பு - 150 கிராம்,
முருங்கைக்காய் - 1,
கத்தரிக்காய் - 1,
உருளைக்கிழங்கு - 1,
கேரட் - 1,
பீன்ஸ் - 3,
புளி - ஒரு பெரிய எழுமிச்சம் பழ அளவு,
சின்ன வெங்காயம் - 5,
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 4,
பச்சை மிளகாய் - 1,
கடலை பருப்பு - 3 தேக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
தனியா - 2 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப,
நெய் - 3 ஸ்பூன்,
எண்ணெய் - 3 ஸ்பூன்.


 

அரிசியையும் பருப்பையும் ஒன்றாக கலந்து கழுவி, ஒன்றுக்கு 2 மடங்கு தண்ணீர் வைத்து குக்கரில் 3 விசில் விட்டு, வேக விட்டு எடுக்கவும்.
வெந்த சாதத்தை லேசாக மசிக்கவும்.
காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பொட்டுக்கடலை, தேங்காய் சேர்த்து, 1/2 ஸ்பூன் எண்ணெயில் வறுத்து எடுத்து பொடித்து வைக்கவும்.
புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
காய்கறிகளை 1 அங்குல நீள துண்டுகளாக நறுக்கவும்.
புளித்தண்ணீரில் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், காய்கள் சேர்த்து வேக விடவும்.
காய்கள் வெந்ததும் பொடித்த பொடியை சேர்த்து ஒரு கொதி விடவும்.
மசித்த சாதத்தை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். (சாதம் தளர இருக்க வேண்டும்)
வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, கடுகு தாளித்து, கீறிய பச்சை மிளகாய், முழு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சாதத்தில் கொட்டி கிளறவும்.கொத்தமல்லி தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Madam,
Excellent stuff. Super aroma and tasty lunch yesterday. Really Kids enjoyed it. But, I have a basic question why Tomato and Garlic not included as ingredients? Will it affect the taste?

Thanks

மேடம் எப்படி இருக்கீங்க..மேடம் சாம்பார் பொடி நீங்கள் எப்படி செய்வீர்கள்?

நான் நலமாகவுள்ளேன். நீங்க எப்படியிருக்கீங்க ? சாம்பார் பொடி செய்யும் முறைகளை கொடுத்துள்ளேன். புதுசு கலாவில் பாருங்க. உங்களுக்கு எந்த முறை பிடிக்கிறதோ அதுபோல் செய்து கொள்ளவும். நன்றி.

அன்புடன்,
செல்வி.

வாழ்த்துகள் சகோதரி செந்தமிழ்ச்செல்வி மற்றுமொரு சதம் கொடுத்தற்கு. நான் நலமாக இருக்கிறேன்.. உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி

சாம்பார் சாதம் செய்யும் போது அரிசியை தனியாக வேகவைத்து சேர்க்கலாமா? நான் உபயோகிப்பது பாஸ்மதி அரிசி ,குக்கரில் சமைத்தால் குழைந்து விடுகிறது. பிரியாணியாக இருந்தால் கூட சிறிது குழைந்தாலும் கணவருக்கு பிடிப்பதில்லை.சாம்பார் சாதம் எனக்கு மிகவும் பிடித்த உணவு,அது தான் கேட்கிறேன். உதவுவீர்களா?

பருப்பை குழைய வேக வைத்து, புளிக்கரைசல், காய்கறிகள், பொடித்த பொடி எல்லாவற்றுடனும் சேர்த்து சாம்பார் போல் நன்கு கொதிக்கும் போது 1 கப் அளவு சாம்பார் எடுத்து வைத்துக் கொண்டு, தேவையான பதத்தில் வடித்த சாதம் சேர்த்து, நன்கு கிளறி, தாளிப்பு சேர்த்து இறக்கவும். அதன் பிறகு எடுத்து வைத்த சாம்பாரை சேர்த்து கலக்கவும். அப்போது தான் சாதம் தளர இருக்கும். வாழ்த்துக்கள். நன்றி.

அன்புடன்,
செல்வி.

நலமா? தெளிவாக விளக்கி என் சந்தேகத்தை தீர்த்தமைக்கு நன்றி

சாம்பார் சாதம் நீங்கள் சொன்னபடியே செய்தேன்.கமகமக்கும் வாசனையோடு மிகவும் சுவையாக இருந்தது.மிகவும் நன்றி மேடம்.கூட்டாஞ் சோறு பகுதியில் உங்கள் பக்கத்தையும் கண்டு கொண்டேன். அதற்கும் நன்றி.

மிக்க நன்றி, டியர். 'கமகமக்கும் வாசனையோடு' என்று சொல்லும் போதே இங்கே எனக்கும் அந்த வாசனை அடிப்பது போலுள்ளது. நல்ல பக்குவத்தோடு செய்துள்ளீர்கள். குறிப்பு சொல்வது பெரிதல்ல, அதை அதே அளவோடும், பக்குவத்தோடும் செய்யும் போது தான், அந்த குறிப்பின் பலனே கிடைக்கின்றது. 'கூட்டாஞ்சோறு' பகுதியில் மற்ற சகோதரிகளின் மிக அருமையான குறிப்புகளும் உள்ளன, அதையும் செய்து பார்த்து சொல்லுங்கள். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

Portia Manohar
Madam what is the diff in samabar sadham and biibellabath?
Is both same preparation.
Kindly do let me know

Portia Manohar

வாழ்த்துக்கு மிக்க நன்றி.

அன்புடன்,
செல்வி.

செல்வி உங்க சாம்பார் சாதக்குறிப்பை பார்த்து இன்று செய்துவிட்டேன்.ரொம்ப நல்லா வாசனையாகவும் டேஸ்ட்டாகவும் இருக்கு.நன்றி மேடம்.

அன்பு போர்ஷியா,
என்ன வருடத்த தப்பா போட்டிருக்கே? :-( இல்ல நான் இப்ப தான் பாக்கிறனா? ரொம்ப சீக்கிரமே பதில் கொடுத்திட்டேன் போல.
சாம்பார் சாதமும் பிஸிபேளாபாத்தும் வேறு வேறு. பிஸிபேளாபாத்துக்கு பட்டை, கிராம்பு, மராத்தி மொக்கு எல்லாம் பொடித்து போட்டு மசாலா வாசனையுடனிருக்கும். கோயமுத்தூர் அன்னபூர்ணா ஹோட்டலில் ஒருமுறை சாம்பார் சாதம் சாப்பிட்டவர்கள் திரும்ப வேறெங்கு சாப்பிட்டாலும் பிடிக்காது. அந்த சுவைக்கு ஈடான, கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச குறிப்பு இது.

அன்பு மோனி,
பாராட்டுக்கு ரொம்ப நன்றி. உண்மையிலேயே வாசனை அடுத்த வீட்டுக்கும் போயிருக்கும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இன்று செல்வி மேடம் குறிப்பிலிருந்து சாம்பார் சாதம், கருணைக் கிழங்கு புளி மசியல்

சாம்பார் சாதத்தில் ஒரு சௌ சௌ சேர்த்தேன். நன்றாக இருந்தது.

நன்றி செல்வி மேடம்

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு தோழி சீதாலக்ஷ்மி,
பாராட்டுக்கு நன்றி. காய்கறிகள் சேர்ப்பது நமது சௌகரியம் தான்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

I made sambar sadham today. Its very delicious. My hus loved it a lot. Thankyou very much for sharing this recipe. Have taken foto too. Happy new year akka.

அன்பு கவின்,
பாராட்டுக்கு நன்றிப்பா.ஆஹா, போட்டோ அனுப்புப்பா.பார்க்க ஆவலா இருக்கு. உனக்கும், குடும்பத்தாருக்கும் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இன்று foto அனுப்புவிடுகிறேன். இரவு சாதம் சாப்பிட விரும்பாத hus சாதமே சாப்பிட்டுக்கிறேன் என்று இரவும் சாம்பார் சாதம் சாப்பிட்டாங்க. உங்கள் ரெசிப்பி மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி நன்றி.

ஒரு வேண்டுகோள்..கோவை style சில்லி கோபி ரெசிப்பி(dry) மற்றும் ஈரோடு style சில்லி காளான்/கோபி(பஜ்ஜி போல் இருக்குமே) வேண்டும். தருவீங்களா?

கோவை-hus fav.
ஈரோடு-my fav.

நன்றி அக்கா.

அன்பு கவின்,
உனக்கு தெரிந்திருக்குமே கோயமுத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல் சாம்பார் சாதம். அந்த ருசி இல்லைன்னாலும், கிட்டதட்ட அது மாதிரி வரும். ஹஸ்சுக்கு பிடிக்குதுன்னா, அடிக்கடி செய்து அசத்து. ஈரோடு ஸ்டைல் சில்லி கோபி நல்லா தெரியும். கோயமுத்தூர் முடிஞ்சவரை சொல்றேன். செய்து பார். கூடிய விரைவில் தருகிறேன். நன்றிம்மா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.