டிரிப்ள் லேயர்ட் கட்லட்

தேதி: April 17, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 3
காரட் துருவியது - 1/2 கப்
உரித்த பட்டாணி - ஒரு கப்
பனீர் - 200 கிராம்
பச்சைமிளகாய் - 4
லெமன் - ஒரு மூடி
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
ரஸ்க் - ஒரு கப்
மைதா - 1/4 கப்
சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்


 

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
வாணலியில் ஆயில் விட்டு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு துருவிய காரட் சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து மசித்த கிழங்கை போட்டு நன்கு வதக்கி வைக்கவும்.
பட்டாணியை வேக வைத்து தண்ணீர் இல்லாமல் பச்சைமிளகாய், புதினா கொஞ்சம், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
பனீருடன் சிறிது உப்பு, சாட் மசாலா சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
மைதாவை தோசை மாவு பதத்திற்கு உப்பு, நீர் விட்டு கலக்கி வைக்கவும்.
சிறிதளவு பட்டாணி கலவையை எடுத்து அதில் பனீர் உருண்டை வைத்து மூடி உருண்டை செய்யவும்.
பிறகு இதனை உருளைக்கிழங்கு கலவைக்குள் வைத்து மூடி கட்லெட் ஷேப் செய்து மைதாவில் நனைத்து ரஸ்கில் பிரட்டி ஆயிலில் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்