ஸ்டஃப்டு முட்டை பரோட்டா

தேதி: April 17, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

பிரான்ஸில் வசித்து வரும் <a href="experts/620" target="_blank">திருமதி. ரஸியா</a> அவர்களின் தயாரிப்பு இந்த ஸ்டஃப்டு முட்டை பரோட்டா. இவர் வழங்கும் குறிப்புகள் புதுமையாக இருப்பதுடன், மிக அழகானப் படங்கள் செய்முறையை தெளிவாக விளக்குகின்றன. இவர் இந்திய வகை உணவுகளில் மட்டுமல்லாது, சைனீஸ், பிரெஞ்ச் வகை உணவுகள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர்.

 

<b>மாவு தயாரிக்க</b>
மைதா - 750 கிராம்
வெண்ணை - 50 கிராம்
சீனி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
முட்டை - ஒன்று
தண்ணீர் - 325 மில்லி
<b>ஸ்டஃப்பிங்கிற்கு</b>
வெங்காயம் - 6
கொத்துக்கறி - 500 கிராம்
உருளைக்கிழங்கு - 4
கேரட் - 2
பச்சை மிளகாய் - 3
மல்லி,பொதினா - ஒரு பிடி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரன்டி
ஜீரகத்தூள் - ஒரு தேக்கரன்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - அரைத் தேக்கரண்டி
முட்டை - 6
எண்ணை - தேவையான அளவு
தேவையான அளவு - உப்பு
இஞ்சி,பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி


 

முதலில் வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், பச்சைமிளகாய், மல்லி, புதினா ஆகியவற்றை கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
மாவை சலித்து அதில் முட்டையை கலக்கி சேர்க்கவும். பின்பு வெண்ணையை உருக்கி மாவில் ஊற்றவும். தண்ணீரில் சீனி, உப்பு இரண்டையும் சேர்த்து கரைத்து மாவில் ஊற்றி பூரி மாவு பதத்தில் பிசைந்து, பூரி செய்யும் அளவிற்கு உருண்டைகலாக உருட்டி வைக்கவும்.
பின்பு ஒரு கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் சிறிது நறுக்கின வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுதைப்போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அதில் கொத்துக்கறியை சேர்த்து கிளறி வேக விடவும்.
அதன்பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள உருளை, கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கிய பின்பு, மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும்.
பின்னர் சிறிது நேரம் வதக்கிய பின்பு, அதில் மீதமுள்ள நறுக்கின வெங்காயம், மல்லி, புதினா இலை ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
எல்லாம் சேர்ந்து, நன்கு வெந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.
இப்போது முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நன்றாக கலக்கி கொள்ளவும். இரண்டு மாவு உருண்டைகளை பூரி அளவிற்கு தனித்தனியே தேய்த்து, ஒன்றின் மீது கலக்கிய முட்டையை சிறிது ஊற்றி பரவினாற்போல் தடவவும்.
பின்பு அதன் மேல் ஒரு மேசைக்கரண்டி இறைச்சி கலவையை பரப்பினாற்போல் வைக்கவும்.
அதன் மீது தேய்த்து வைத்துள்ள மற்றொரு வட்டத்தை வைத்து மூடவும்,
இதற்கிடையில் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடுபடுத்தவும். சூடான தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் இந்த பரோட்டாவை பாந்தமாக போடவும்.
மிதமான தீயில் ஒருபுறம் வெந்த பின்பு மறுபக்கம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்தபின்பு கலக்கிய முட்டையை அதன் மேல் பரவினாற்போல் ஊற்றவும்.
இருபுறமும் முட்டையை ஊற்றி பரவி மேலும் சிறிது நேரம் வேகவிடவும். வெந்ததும் எடுத்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்கள் ரெசிபி நன்றாக இருக்கு.
எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்.
மைதா 2 கப் வைத்து செய்ய ,மாவு தயாரிக்கும் பொருள் அளவு சொல்லுங்களேன்.
உங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk

சாதிகா அக்கா முட்டை ரொட்டி கதிஜா என்று குறிப்பிட்டு இருந்தேன் அது கதிஜா இல்லை ரஸியா.
இந்த முறையும் நாங்கள் செய்வோம்

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா.நீங்கள் சொன்னதும் கதீஜாவின் குறிப்பினுள் போய் பார்த்தேன்.கிடைக்கவில்லை.முட்டை சமையல் உள்ளும் போய் பார்த்தேன்.அங்கும் கிட்டவில்லை.சரி பிறகு பொறுமையாக தேடலாம் என்று விட்டு விட்டேன்.ஈஸியாக பார்பதற்கு வசதியாக ஸ்டஃப்டு முட்டை பரோட்டா ரெசிபியில் இருந்தே எனக்கு பதிவு போட்டு இருந்தமைக்கு நன்றி.ஒரு நாள் இந்த முறையிலும் செய்து பார்த்து விடுவோம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

என் அம்மா இதே மாதிரி செய்து நல்ல கொத்திவிட்டு பிறகு மிளகு துள், லெமென் பிழிவார்கள் அருமைஆக இருக்கும்
ஆனால் நான் என் ரெஸிபியில் கொடுத்து இருப்பது என் மாமியார் செய்யும் முறை.

ஜலீலா

Jaleelakamal