கருப்பு மொச்சை கொட்டை குழம்பு

தேதி: April 17, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கருப்பு மொச்சை கொட்டை - ஒரு கப்
புளி - லெமன் சைஸ்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
புண்டு - 2 பல்
வெங்காயம் - ஒன்று
பட்டை - ஒரு சின்ன துண்டு
லவங்கம் - 2
சோம்பு - 1/4 ஸ்பூன்


 

மொச்சைகொட்டையை குக்கரில் வேக வைக்கவும்.
தேங்காயுடன் பட்டை, லவங்கம், சோம்பு, பூண்டு மற்றும் பாதி வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது ஆயில் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து மீதமுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பிறகு கரைத்துவைத்துள்ள புளியை ஊற்றி சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைக்கவும்.
பிறகு அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.
குழம்பு கொதித்ததும் வேகவைத்த மொச்சையை சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.
இது சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்தகுழம்பு செய்தேன், காராமணியைத்தானே சொல்லியுள்ளீங்கள். அதில்தான் நான் செய்தேன். நல்ல சுவை. கறித்தூள்தான் சிறிது சேர்த்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்