பாலக் துவையல்

தேதி: April 17, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாலக் - ஒரு கட்டு
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
புளி - கொஞ்சம்
வெங்காயம் - ஒன்று
பூண்டு - ஒரு பல்
உப்பு - தேவையான அளவு


 

கீரையை தண்ணீர் தெளித்து வேகவைத்துக் கொள்ளவும்.
உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, மிளகாய் அனைத்தையும் சிவக்க வறுக்கவும்.
வெங்காயத்தையும் வதக்கிக்கொள்ளவும்.
வறுத்த பொருட்களை முதலில் அரைத்து பிறகு கீரை, புளி, உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
ஒரு ஸ்பூன் ஆயிலில் கடுகு, பெருங்காயம் தாளித்து கொட்டவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் சாந்தி,
இன்றைக்கு உங்களின் பாலக் துவையல் தான் செய்து பார்த்தேன்.ரொம்ப அருமையா இருந்துச்சுபா.நீங்க தேவையான பொருட்களில் பூண்டு குறிப்பிட்டுட்டு அதை செய்முறையில் எழுத தவறியதால் நானும் அதை பார்க்கவே இல்லை.ஆனால் பூண்டு போடாமலே இவ்வளவு டேஸ்ட்.என் கணவ்ர் இது பாலக் கீரையில் செய்தது மாதிரியே இல்லையே,நல்லா இருக்குன்னு சொன்னார்.தங்களின் குறிப்புக்கு நன்றி!!