புளி மிக்சர்

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளி - 25 கிராம்
அரிசி - 2 1/2 கப்
மிளகாய் வற்றல் - 5
கடலைப் பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
கடுகு - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கடலெண்ணெய் - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிது


 

முதலில் புளியில் விதைகளை எடுத்து சுத்தம் செய்து சிறிது நீரில் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு பிறகு புளி நீரை வடிகட்டி மாவுடன் கலந்து தேவையான உப்பைப் போட்டுக் கெட்டியாகப் பிசையவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் கடுகைப் போட்டு பொரிந்ததும் மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றையும் போட்டு வறுத்துக் எடுத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்ததை, மாவுடன் போட்டு நன்றாக எல்லாப் பொருட்களும் ஒன்று சேரும் வரை கிளறிவிடவும்.
மாவு உதிர்ந்து தனித்தனியாக மணல் பக்குவத்திற்கு வந்ததும் கீழே இறக்கி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்