தாய்லன்ட் கார்லிக் சிக்கன்

தேதி: April 18, 2007

பரிமாறும் அளவு: 5நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

சிக்கன் லெக்ஸ் - பத்து
வெங்காயம் - இரண்டு
பூண்டு - ஆறு பற்கள்
காய்ந்தமிளகாய் - நான்கு
லெமன் கிராஸ் - ஒன்று
எண்ணெய் - கால்கோப்பை
கொத்தமல்லி - ஒரு பிடி
சின்னமன் பவுடர் - கால் தேக்கரண்டி
சிக்கன் ஸ்டாக் - ஒன்றரை கோப்பை
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
புளி பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
மீன் சாஸ் - இரண்டு மேசைக்கரண்டி
வறுத்த வேர்க்கடலை - கால் கோப்பை
பீனட் பட்டர் - ஒரு மேசைக்கரண்டி


 

சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும்.
காய்ந்தமிளகாயை சுடுதண்ணீரில் போட்டு பத்து நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவும்.
லெமன் கிராஸ்ஸை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கொத்தமல்லியை நொறுங்க நறுக்கி வைக்கவும்.
வறுத்த வேர்க்கடலையை பொடியாக நறுக்கி அல்லது நசுக்கி வைக்கவும்.
அரவை இயந்திரத்தில் பூண்டு, வெங்காயம், லெமன்கிராஸ், கொத்தமல்லி ஆகியவற்றைப் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும். அதில் புளி பேஸ்ட்டையும், சின்னமன் தூளையும் போட்டு கலக்கி வைக்கவும்.
அடிகனமான சட்டியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து சிக்கன் லெக்ஸ்ஸை போட்டு வதக்கவும்.
அடிப்பிடிக்காமல் சிவக்க வதக்கி ஒரு தட்டில் தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு அதே எண்ணெயில் தயாரித்துள்ள பூண்டு பேஸ்ட்டை போட்டு வதக்கவும். நன்கு பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி விட்டு சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி கலக்கி விடவும்.
பிறகு அதில் வதக்கி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொதிக்க விடவும்.
அடுப்பின் அனலை குறைத்து வைத்து அரைமணி நேரம் வேக வைக்கவும்.
பிறகு மீன் சாஸ் மற்றும் பீனட் பட்டைரை போட்டு நன்கு கலக்கி விட்டு மேலும் பத்து நிமிடம் அடுப்பில் வைத்திருக்கவும்.
கோழி நன்கு வெந்தவுடன் உப்பையும், மிளகுத்தூளையும் சேர்த்து கலக்கி இறக்கி விடவும்.
இந்த சுவையான தாய்லன்ட் கார்லிக் சிக்கனை வெள்ளை சோற்றுடனோ அல்லது வேகவைத்த நூடுல்ஸ்ஸுடனோ மேலாக ஊற்றி அதன் மீது நசுக்கி வைத்துள்ள வேர்க்கடலையை தூவி விட்டு சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்