மசாலா தட்டை

தேதி: April 19, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 2
அரிசி மாவு - 4 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
புதினா - 1/2 கப்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சைமிளகாய் - 5
ஆயில் - பொரிக்க
உப்பு - 1/2 ஸ்பூன்
ஓமம் - ஒரு ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - ஒரு ஸ்பூன்


 

உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்கவும்.
இஞ்சி, மிளகாய், புதினா, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
எல்லா பொருட்களையும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான நீர் விட்டு பூரி மாவு போல் பிசைந்துக் கொள்ளவும்.
சிறு உருண்டைகளாக்கி ஒர் ப்ளாஸ்டிக் காகிதத்தில் தட்டி சூடான எண்ணெயில் பொரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்