மெக்ஸிகன் சில்லி

தேதி: April 19, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரெட் பீன்ஸ் - 1/2 கப்
வெள்ளை கொண்டைகடலை - 1/4 கப்
கருப்பு பீன்ஸ் - 1/4 கப்
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 2 பல்
குடைமிளகாய் - ஒன்று
அலபீனோ பெப்பர் - ஒன்று
ப்ரௌன் சுகர் - ஒரு டேபிள் ஸ்பூன்
பால்சாமிக் வினிகர்(balsamic vinegar) - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
டொமேட்டோ ப்யூரி - ஒரு கப்
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
பிரியாணி இலை - ஒன்று


 

மூன்று பீன்ஸ்களையும் 8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் உப்பு, பிரியாணி இலை போட்டு வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஆயில் ஊற்றி நசுக்கிய பூண்டு வெங்காயம், அலபீனோ பெப்பர், குடைமிளகாய் போட்டு வாசம் போகும் வரை வதக்கவும். மிளகாய் தூள் சேர்க்கவும்.
வேக வைத்த பீன்ஸை சேர்த்து டொமேட்டோ ப்யூரி சேர்க்கவும்.
3 கப் தண்ணீர் ஊற்றி பால்சாமிக் வினிகர் சேர்க்கவும். அடுப்பை நிதானமாக எரியவிட்டு 45 நிமிடங்கள் வேக வைக்கவும்.
இடை இடையே கிளறி விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் இன்னும் கொஞ்சம் சேர்க்கவும். கடைசியாக ப்ரௌன் சுகர் சேர்த்து இறக்கவும்.


ஒரு கப்பில் இந்த சூப்பை ஊற்றி ஒரு ஸ்பூன் சோர் க்ரீம்(sour cream) போட்டு கார்லிக் ப்ரெட் அல்லது டோர்டில்லாவுடன் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ரொம்ப நன்றாக இருந்தது. இது குளிருக்கு நல்ல இருந்தது.