தேங்காய் பால் பாயாசம்

தேதி: April 19, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் துருவல் - ஒன்றரை கப்
பச்சரிசி - கால் கப்
வெல்லம் - கால் கிலோ
ஏலக்காய் - 4
முந்திரி - 6
திராட்சை - 10
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி


 

முதலில் வெல்லத்தை நுணுக்கி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசியை கழுவி, 15 நிமிடம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த அரிசி மற்றும் தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் அதில் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்.
அதனுடன் பொடி செய்து வைத்திருக்கும் வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து வெல்லம் கரையும் வரை 3 நிமிடம் கிளறவும்.
வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை இரண்டையும் போட்டு ஒரு நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.
பாயாசம் பொங்கி வந்ததும் வறுத்த முந்திரி பருப்பை போட்டு இறக்கவும்.
சூடான, சுவையான தேங்காய் பால் பாயாசம் இப்போது ரெடி. இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. ஜோதி அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்