மஷ்ரூம் குருமா

தேதி: April 19, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பட்டன் மஷ்ரூம் - 10
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் (முதல் பால்) - ஒரு கப்
தேங்காய் பால் (இரண்டாம் பால்) - ஒரு கப்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - 2 டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்


 

ஒரு பானில் ஆயில் ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
தனியா, சில்லி, கரம் மசாலா தூள்களை சேர்க்கவும்.
பிறகு கட் செய்த மஷ்ரூம் சேர்த்து சுருள வதக்கவும்.
இரண்டாம் தேங்காய் பாலை சேர்த்து வேக விடவும்.
பிறகு திக்கான முதல் தேங்காய் பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சாந்தி, உங்க குறிப்பில் இருந்து ரவா தோசைக்கு, மஷ்ரூம் குருமா நல்லாய் இருக்கும் என செய்தேன். இரண்டும் நல்லாய் இருந்தது.வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சாந்தி மஷ்ரும் குருமா ,சப்பாத்திக்கு செய்தேன் நல்லா இருந்தது.தேங்காய்ப்பாலூற்றி செய்ததில்லை ,இது நல்லா இருந்தது. நன்றி