உருளைக்கிழங்கு போண்டா

தேதி: April 20, 2007

பரிமாறும் அளவு: 20 போண்டாகள் வரும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 3,
கடலை மாவு - 1 கப்,
அரிசி மாவு - 1/3 கப்,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
ஆப்ப சோடா - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


 

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்து வைக்கவும்.
வெங்காயம் தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின், உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
ஆறிய பின் எழுமிச்சம் பழம் அளவு உருண்டைகளாக்கி வைக்கவும்.
கடலை மாவு, அரிசி மாவு, ஆப்ப சோடா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து தோசை மாவு பததிற்கு கரைக்கவும்.
உருண்டைகளை மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

nan innum seithu parkavilai kandippaga seithuvittu karutthu therivippen

Dhatchinamoorthy.G

திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த உருளைக்கிழங்கு போண்டாவின் படம்

<img src="files/pictures/u_bonda.jpg" alt="picture" />

செல்வியக்கா,
பதில் போடுவதற்கிடையில் படம் வந்துவிட்டது. மிகவும் அருமையான போண்டா. ஸ்கூலுக்கு செய்து கொடுத்தேன். மிகவும் அருமை என்று சொன்னார்கள். வெள்ளையர்கள் என்பதால் பச்சை மிளகாய் சேர்க்காமல் தூள் மாத்திரமே சேர்த்தேன். நன்றாக வந்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு அதிரா,
நம்ம அட்மின் அவ்வளவு சுறுசுறுப்பு! (நான் என்ன கொடுமை செய்தேன் பாபு, ஒரே நாளிலேயே இத்தனை படத்தையும் போட்டா, நான் எப்படி பதிவு போடறது?)
சூப்பரா இருக்கு போண்டா. நான் கூட குழந்தைங்க சாப்பிடறதுன்னா, பச்சை மிளகாய் போட மாட்டேன். நன்றி அதிரா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

Hai

I had try this today... Really it's superb... thank u....

தேவி....