கேரட் தோசை

தேதி: April 21, 2007

பரிமாறும் அளவு: 7 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 1 டம்ளர்
பச்சரிசி - 1 டம்ளர்
உளுத்தம் பருப்பு - 1/2 டம்ளர்
உப்பு - தேவையான அளவு
கேரட் - 3/4 (துருவியது)
மிளகாய் வற்றல் - 5
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1


 

புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
மிளகாய் வற்றல், சீரகம், வெங்காயத்தை சிறியதாக நறுக்கவும்.
உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
புளித்த பின் மிளகாய் வற்றல், சீரகம், வெங்காயம் போட்டு கலந்து ஆப்ப சோடா சேர்த்து கலக்கி ஊத்தாப்பம் போல் கனமாக இருபக்கமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்