பருப்பு சட்னி

தேதி: April 22, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

காய்ந்த மிளகாய் - 5,
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
தேங்காய்த்துருவல் - 1/2 மூடி,
புளி - சிறு நெல்லிக்காய் அளவு,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 ஸ்பூன்.


 

வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு வறுத்து, கடைசியாக தேங்காய்த்துருவல் சேர்த்து வறுத்து எடுத்து, புளி, பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.


இட்லி, தோசைக்கு பொருந்தும்.

மேலும் சில குறிப்புகள்