உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

முட்டை குழம்பு

 


தேவையானப் பொருட்கள்

  • முட்டை -6,
  • தக்காளி - 1,
  • சின்ன வெங்காயம் - 15,
  • பெரிய வெங்காயம் - 1,
  • பூண்டு - 4 பல்,
  • காய்ந்த மிளகாய் - 5,
  • தேங்காய் துருவல் - 1 மூடி,
  • சோம்பு - 1 தேக்கரண்டி,
  • கசகசா - 1 தேக்கரண்டி,
  • சீரகம் - 1 தேக்கரண்டி,
  • தனியா தூள் - 1 மேசைக்கரண்டி,
  • கடுகு - 1/2 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை - சிறிது,
  • மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு,
  • எண்ணெய் - 2 ஸ்பூன்.

செய்முறை

  • சிறிய வெங்காயம், மிளகாய், தேங்காய் துருவல் எல்லாவற்றையும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
  • வதக்கியவற்றோடு சோம்பு, கசகசா, சீரகம், தனியா தூள் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
  • பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  • நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கிய பின், அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • குழம்பு கொதித்ததும், முட்டையை உடைத்து ஒவ்வொன்றாக பக்கம், பக்கமாக ஊற்றவும்.
  • முட்டை வெந்து மேலே மிதக்கும் போது இறக்கவும்.

குறிப்பு:

சாதத்திற்கும், சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு. 20 நிமிடங்கள்.
  random food image


comments
egg kuzhlambhu
நவம்பர் 19, 2007 - 7:22pm - வழங்கியவர் bagyalakshmi

hi thanks for the recipe, it tastes so good, it's also suitable for paratha , try it

egg kulambu
மே 15, 2008 - 6:48pm - வழங்கியவர் alarmelup

super recipie