ஃபிரெஞ்சு ஆப்பிள் பஜ்ஜி

தேதி: April 23, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆப்பிள் - 4
மைதா - 250 கிராம்
சீனி - 100 கிராம்
எண்ணெய் - பொரிக்க தேவையானது
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு


 

முதலில் சீனியை மிக்ஸியில் இட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும், ஆப்பிளை தோல் நீக்கி விரல் கன அளவிற்கு ரவுண்டாக வெட்டி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி விடவும்.
இப்பொழுது நடுவில் ஓட்டையுடன் காணப்படும், பின்பு மைதாவை சோடா உப்புடன் நன்கு சலித்து உப்பு சேர்த்து பஜ்ஜி மாவில் கரைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய ஆப்பிளை மாவில் முக்கி எண்ணெயில் விட்டு ஒரு புறம் வந்த பின்பு மறுபுறம் திருப்பி போடவும்.
மிதமான தீயில் பொரித்து எண்ணெயை வடிகட்டி ஒரு டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். பொரித்த பஜ்ஜியின் மேல் அரைத்த சீனியை பரவினாற் போல் தூவவும், அனைத்து ஆப்பிளையும் இதே போல் செய்யவும்.
இதுவே ஃபிரெஞ்சு ஆப்பிள் பஜ்ஜி குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரொம்ப ரொம்ப சூப்பரான இனிப்பு ஸ்நாக்ஸ்.கோல்டன் ஆப்பிளில் சூப்பர் சிவை.நன்றி ரசியாக்கா!!

மேனகாவின் பின்னூட்டம் பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!!இது பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ஷிவானி பெரியவளா ஆன பின்பு செய்து குடுங்க!!