கோலா மீன் வடை

தேதி: April 24, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோலா மீன் - 6
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
மல்லித்தழை - ஒரு பிடி
மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி
சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகுப்பொடி - ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - பாதி மூடி
பொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி
முட்டை - 2
எண்ணெய் - 100 மில்லி
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி


 

முதலில் மீனைக் கழுவி உப்பு போட்டு உரசி சுத்தம் செய்யவும். பின்பு ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் வீட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்த பின்பு மீனை அதில் போட்டு வேக விடவும். மீன் வெந்த பின்பு எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்.
பின்பு அதில் உள்ள அனைத்து முள்ளையும் எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துருவி பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்பு உதிர்த்து வைத்துள்ள மீனில் நறுக்கிய மிளகாய், வெங்காயம், மல்லிதழை, மசாலா பொடிகள், தேங்காய், இஞ்சி பூண்டு விழுதுகள், உப்பு, முட்டை அனைத்தையும் ஒன்றாக பிசறவும்.
பின்பு ஒரு நாண் ஸ்டிக் பேனில் எண்ணெயை காயவிட்டு மீன் கலவையை வடைகளாக தட்டி போடவும்.
லேசான தீயில் இரு புறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும். இதுவே கோலா மீன் வடை.


மேலும் சில குறிப்புகள்


Comments

hai mam,
நானும் பிரான்சில் தான் வசிக்கிறேன்
கோலா மீன் இங்கு கிடைக்கிறதா? அதன்
பிரெஞ்சு பெயர் என்ன என்று சொல்ல
முடியுமா ?

sri

ஹாய் ஸ்ரீ
எப்படி இருக்கீங்க?
இது பிரான்ஸில் poisson volant என்ற பெயரில் இந்திய கடைகளில் கிடக்கிறது!இன்று எங்கள் வீட்டில் இந்த கோலா மீன் வடைதான் என்றால் நம்ப மாட்டீர்கள்!!!நீங்கள் எந்த பகுதியில் வசிக்கிறீர்கள் என்று தெரிந்தால் நான் கடையின் பெயரை தெரிவிப்பேன்.

நான் நலமாக இருக்கிறேன். நீங்கள்
எப்படி இருக்கீங்க?விரைவில் பதில்
அளித்தமைக்கு நன்றி.நான் stasbourg(alsace) சில் வசிக்கிறேன்
இங்கு ஒரு தமிழ் கடை உள்ளது.கோலா மீன் china கடையில்
கிடைக்குமா?எனக்கு donerkebab குறிப்பும் அனுப்ப முடியுமா?
உங்கள் சமையல் குறிப்பு எல்லாம் மிகவும் நன்றாக உள்ளது.

sri

அன்புள்ள ஸ்ரீ
ஸாரிமா நான் ரொம்ப நாளாச்சு அருசுவை பக்கம் வந்து,
சைனீஸ் கடைகளில் கிடைக்கலாம்.நீங்கள் வெகு தொலைவில் இருக்கிறீர்கள் எனக்கு அந்த பக்கம் தெரியவில்லை.எனது குறிப்புகள் நன்றாக இருப்பதாக தெரிவித்தமைக்கு ரொம்ப நன்றிமா!!!