உருளைக்கிழங்கு மசாலா

தேதி: April 24, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 250 கிராம்
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 3
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மாங்காய் பொடி - 1 தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கை சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கைப் போட்டு மாங்காய் பொடி போட்டு மிளகாய் பொடி, மஞ்சள் பொடி கிளறி வதக்கி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்