தக்காளி தொக்கு - 2

தேதி: April 24, 2007

பரிமாறும் அளவு: 1/2 கிலோ தொக்கு வரும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளி - 1 கிலோ,
காய்ந்த மிளகாய் - 25,
பெருங்காயம் - சிறிது,
புளி - ஒரு ஆரஞ்சு பழ அளவு,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


 

தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் பாதி எண்ணெய் விட்டு, மிளகாயை வறுத்து எடுத்துக் கொண்டு, தக்காளியை வதக்கவும்.
தக்காளி தண்ணீர் சுண்டி, நன்கு வதங்கிய பின் இறக்கவும்.
ஆறிய பின் உப்பு, புளி சேர்த்து கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும்.
மீதி எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுது சேர்த்து நன்கு சுருள எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கவும்.


இந்த முறையில் செய்தால் எண்ணெய் சிறிது அதிகம் செலவாகும்.

மேலும் சில குறிப்புகள்