முட்டை குருமா

தேதி: April 24, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - 4,
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ,
பூண்டு - 10 பல்,
காய்ந்த மிளகாய் - 7,
தேங்காய் துருவல் - 1/2 மூடி,
தனியா - 2 மேசைக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.


 

மிளகாய், தனியா, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
உருளைக்கிழங்கு, முட்டையை வேக வைத்து, தோல் உரித்து, 4 துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளிக்கவும்.
பூண்டு நன்கு வதங்கிய பின், அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்ததும், நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு, முட்டையை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.


பிரியாணிக்கு நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்