முந்திரி கொத்து

தேதி: April 24, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் - 1,
பச்சரிசி - 200 கிராம்,
பாசிப்பயிறு - 500 கிராம்,
உளுத்தம்பருப்பு - 100 கிராம்,
வெல்லம் - 1/4 கிலோ,
எண்ணெய் - தேவையான அளவு.


 

பச்சரிசியை கழுவி, காய வைக்கவும்.
காய்ந்தவுடன் உளுத்தம்பருப்புடன் சேர்த்து நைசாக மெஷினில் அரைத்து வைக்கவும்.
பாசிப்பயிறை நன்கு சிவக்க வறுத்து, மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டி எடுத்தால், தோல் தனியே வந்து விடும்.
தோலை புடைத்து எடுத்து விட்டு, நைஸ் மாவாக அரைக்கவும்.
தேங்காயை துருவி வைக்கவும்.
வெல்லத்தைத் தூளாக்கி, 1/2 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, கம்பி பாகு வைக்கவும்.
அதில் தேங்காய் துருவலையும் பாசிப்பயிறு மாவையும் சேர்த்து கிளறி, ஆறிய பின் சிறு சிறு உருண்டைகளாக செய்து வைக்கவும்.
பச்சரிசி, உளுந்து அரைத்த மாவை சிறிது உப்பு சேர்த்து, கெட்டியாக கரைக்கவும்.
செய்து வைத்த உருண்டைகளை மாவில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும்.


பாசிப்பயிறு உருண்டைகளை முதல் நாளே கூட செய்து வைத்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்