வெங்காய தொக்கு

தேதி: April 24, 2007

பரிமாறும் அளவு: 1/2 கிலோ தொக்கு வரும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சின்ன வெங்காயம் - 1 கிலோ,
மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
புளி - ஒரு ஆரஞ்சு பழ அளவு,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
வெந்தயம் - 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


 

வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
புளியை தண்ணீரில் ஊற வைத்து, கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
வெந்தயத்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து நைசாக பொடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், மிளகாய் தூள், கரைத்த புளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் சுண்டி, நன்கு சுருண்டு வரும் போது பொடித்த வெந்தய பொடி சேர்த்து, கிளறி இறக்கவும்.


ஆறிய பின் பாட்டிலில் போட்டு மூடி, ஃப்ரிஜ்ஜில் வைத்தால், ஒரு மாதம் வரை கெடாமலிருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குறிப்ள் சின்ன வெங்கயம் பதில் பெரிய வெங்கயம் உப்யோகிகலமா? நான் இருகும் பகுதில் சின்ன வெங்கயம் கிடைப்து அரிது. நன்றி.

சின்ன வெங்காயத்திற்குப் பதில் பெரிய வெங்காயம் உபயோகிக்கலாம் ஆனால் நைசாக இல்லாமல் கரகரப்பாக அரைத்துக் கொண்டு சேர்க்கவும். சின்ன வெங்காயம் உபயோகித்தால் வெகு நாட்களுக்கு வரும், பெரிய வெங்காயமெனில் சீக்கிரமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் (1 மாதத்திற்குள்). நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

டியர் செல்வி மேடம் அவர்களுக்கு, உங்களின் வயது தெரியமல், உங்கள் ப்ரொபயல்யும் சரியக பர்க்காமல், உன்ங்களின் முழுபெயரையும் வைத்து அழைத்து விட்டேன் மண்னித்து கொள்ளுங்கள். அரட்டை மன்றதில் உங்களை எல்லோரும் அழைப்பதை பர்த்து ப்ரொபயல்யும் ஒழுங்காக பார்த்த பின்ன்ர் தான் தவறு புரிந்தது பெரிய சாரி. வெங்கய தொக்கின் ஆத்தென்டிக் சுவை மாறி விடகூடது என்பத்ற்காக, இந்தியன் கிரசரியில் சின்ன வெங்கயத்த்ற்கு சொல்லி வைத்து இருக்கிறேன். இன்னும் 1 வாரத்தில் வந்து விடும் என்று சொல்லி இருக்கிறர்கள், வந்த பின் செய்து பார்து விட்டு . கண்டிப்பக பிண்னுட்டம் தருகிறேன். நன்றி

அன்பு மகள் நித்யா,
பரவால்ல, இதிலென்ன இருக்கு. நீ அப்படி கூப்பிட்டதால எனக்கும் கொஞ்சம் வயசு கம்மியான மாதிரி இருந்தது, கவுத்துட்டியேம்மா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.