அவல் பாயசம்

தேதி: April 25, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவல் - ஒரு கப்
சர்க்கரை - 1/2 கப்
காய்ச்சிய பால் - 1/4 லிட்டர்
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 3
குங்குமப்பூ - 2 சிட்டிகை
கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை
திராட்சை - 6


 

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அவல் போட்டு வறுத்துச் சிவந்தவுடன் தண்ணீர் கலந்து கட்டியாகாமல் கிளறவும்.
அவல் நன்கு வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து கரைந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
காய்த்து வைத்த பாலுடன் குங்குமப்பூ, கேசரிப்பவுடர், ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்கு கலக்கி அவலோடு சேர்த்து நன்கு கலக்கவும்.
இறுதியில் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை இவற்றைச் சேர்க்கவும்.
சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அறுசுவையின் மற்றுமொரு அதிவேக செஞ்சரி சாதனையாளரான தங்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்