க்ரீன் புலாவ்

தேதி: April 25, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 1 1/2 கப்
பச்சை பட்டாணி - 100 கிராம் (ஊறவைத்தது)
சிக்கன் - 250 கிராம்
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி இலை - 1 கட்டு
தக்காளி - 150 கிராம்
பல்லாரி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 6
கருவா - 1 துண்டு
ஏலம் - 2
கிராம்பு - 3
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
ரம்பை இலை - சிறிது
தயிர் - 2 1/2தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
முந்திரி - 10
திராட்சை - 10
தேங்காய் பால் - 1 கப் கெட்டியானது
எழுமிச்சை பழம் - பாதி


 

முதலில் வெங்காயம்,பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.சிறிது வெங்காயம் தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்.

தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.(சிறிது தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்)
சிறிது நெய்யில் முந்திரி,திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.

கொத்தமல்லி இலை,புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.(சிறிது தாளிப்புக்கு இரண்டையும் எடுத்துவைக்கவும்)

பின் சிக்கனில் நறுக்கிய பச்சை மிளகாய் ,வெங்காயம்,தக்காளி,1 1/2 தேக்கரண்டி தயிர்,புதினா,கொத்தமல்லி இலை,பட்டாணி,கழுவின அரிசியை போட்டு பிரட்டிவைக்கவும்.

பின் குக்கரில் நெய் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு போட்டு,பின் வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கி,இஞ்சி,பூண்டு விழுது,1 தேக்கரண்டி தயிர்,ரம்பை இலை,கொத்தமல்லி இலை,புதினா போட்டு தாளித்து, பின் சேர்த்துவைத்த கலவைகளை போட்டு நன்கு கிளறி தேங்காய் பால்,மற்றும் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கிளறி குக்கரை மூடிவிடவும்.

வெந்ததும் எழுமிச்சை சாற்றை பிழிந்து ஊற்றி வறுத்த முந்திரி,திராட்சையை மேலே தூவி பரிமாறவும்.


குக்கரில் அதிகமான தீயில்வைத்து 2விசில் வந்ததும் தீயை குறைத்து 2விசில் வந்ததும் இறக்கவும் 5 நிமிடம் கழித்து குக்கரில் நீராவி வெளியேறியதும் மூடியை திறக்கவும்.

தேங்காய் பால் மற்றும் தண்ணீரின் அளவை அரிசியின் அளவுக்கு 2 மடங்காக வைத்துக்கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கதீ, எப்படி இருக்கீங்க? உங்க கிரீன் புலாவ் செய்தேன். சிக்கனில் முதன் முறையாக புலாவ் இப்போதுதான் செய்தேன். செய்வதற்கு எளிதாகவும், மிகவும் நன்றாக இருந்தது. என் பையனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. நன்றி உங்களுக்கு.

நான் நலம். நீங்க நலமா.புலாவ் செய்து கருத்து சொன்னதுக்கு நன்றி.பையனுக்கு பிடித்தது மிகவும் சந்தோஷம்.

அன்புடன் கதீஜா.

அன்புள்ள கதீஜா!

எப்படி இருக்கிறீர்கள்?
உங்களின் க்ரீன் புலவை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக, சுவையாக வந்தது. அத்துடன் வெள்ளடையும் செய்தேன். சுவையாக இருந்தது. ஒரு சிறிய சந்தேகம். வெள்ளடையை காலை டிபனுக்கு செய்வீர்களா? நான் அதை எண்ணெயில்தான் பொரித்தேன். அதை மிக மெல்லியதாக பூரி மாதிரி பொறிப்பீர்களா? நான் சற்று கனமாகப் பொறித்தேன்.

எப்படி இருக்கீங்க. உங்களை போன்ற அசத்தல் ராணிகள்கிட்ட இருந்துலாம் பின்னூட்டம் வரும்னு நான் எதிர் பார்க்கவே இல்லை ரெம்பவும் சந்தோஷமாக இருக்கு மேம் நீங்க செய்து நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு ரெம்பவும் நன்றி. 3 நாள் நான் அறுசுவைக்கு வராததால் பதில் கொடுக்க தாமதம் மன்னிக்கவும்.

வெள்ளடையும் செய்தீங்களா நன்றிமா. அது சற்று கனமாகத்தான் இருக்கும்.நீங்க செய்தது சரிதான். நாங்கள் இதை ஈத் பெரு நாளைக்கு செய்வோம்.மட்டன் அல்லது சிக்கன் கிரேவிக்கு நல்லா இருக்கும். மாசி சம்பல் கூட சாப்பிட்டாலும் நல்லா இருக்கும். எங்க பாட்டி காலையில் டிபனுக்கு செய்வார்கள்.

அன்புடன் கதீஜா.

உங்களின் அன்பான பதில் சந்தோஷத்தை மிகவும் தந்தது.
கலைகள் கற்பதில் எப்போதுமே எல்லை கிடையாது. சமையல் கலையும் அது போலத்தான். வித்தியாசமான குறிப்புகள் செய்வதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். உங்கள் குறிப்புகளை இன்னும் அதிகமாகச் செய்ய விரும்பினேன். வீட்டு வேலலகள், விருந்தினர்கள் என்று குறிப்பிட்ட காலத்துக்குள் அது முடியாமலேயே போய்விட்டது.