காளான் பிரியாணி.

தேதி: April 25, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

பாசுமதி அரிசி - 2 கப்,
பட்டன் காளான் - 20,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
தக்காளி - 2,
தயிர் - 1/2 கப்,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி,
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 4,
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி,
ஏலக்காய் - 2,
புதினா - 1/4 கட்டு,
கொத்தமல்லி தழை - 1/4 கட்டு,
பிரிஞ்சி இலை - சிறிது,
எலுமிச்சம் பழம் - 1,
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


 

அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
காளான்களைக் கழுவி, நான்காக வெட்டி வைக்கவும்.
பூண்டு, இஞ்சியை அரைத்து வைக்கவும்.
வெங்காயத்தை சன்னமாக நறுக்கி வைக்கவும்.
கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தக்காளியை வெந்நீரில் போட்டு, தோலுரித்து அரைத்து வைக்கவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சிறிது உப்பு சேர்த்து, அரிசியை உதிராக வேக வைத்து, வடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து, காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அத்துடன் அரைத்த தக்காளியையும் சேர்க்கவும்.
கலக்கிய தயிர், கரம் மசாலா, கொத்தமல்லி, புதினா, காளான் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் சாதத்தை ஒரு அடுக்காகவும் (layer), வதக்கிய மசாலா ஒரு அடுக்காகவும் மாற்றி மாற்றி போட்டு, மேலே சாதத்தால் முடிக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை இறுக்கமாக மூடி, மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்தால் தம் ஆகிவிடும்.
1/4 மணி நேரம் தம்மானதும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செய்வதற்கு இலகுவாக இருந்ததோடு மிகவும் ருசியாக இருந்தது.அருமையான இந்த குறிப்பிற்கு நன்றி மேடம்

எப்படி இருக்கீங்க? காளான் பிரியாணி செய்வதற்கு இலகுவாக இருப்பதாக சொன்னதற்கு மிக்க நன்றி. பாராட்டுக்கு மிக்க நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள செந்தமிழ் செல்வி அவர்களுக்கு நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் குறிப்பு தரும் வேகத்தை பார்த்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கு எல்லா குறிப்பும் வித்தியாசமாக இருக்கிறது. எனக்கு கல்யாணமாகி இரண்டு வருடம் ஆகிறது இன்னும் சரியாக சமைக்க தெரியவில்லை. சமைக்கும் போது நிறைய சந்தேகம் வருகிறது எனக்கு தெரியாத குறிப்புகளையும் சந்தேங்களையும் நான் உங்களிடம் கேட்கலாமா?எனக்கு ஒரு நல்ல தோழியாக இருந்து பதில் சொல்வீர்களா??

நான் நலமே. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? பாராட்டுக்கு நன்றி. எல்லோருக்குமே சமையல் தினமும் புதிது போலத்தான் இருக்கும். அப்படி நினைத்துக் கொண்டு சமைத்தால்தான் சமையலும் நன்றாக இருக்கும். எந்த குறிப்புகளையும், சந்தேகங்களையும் தாராளமாக என்னிடம் நீங்கள் கேட்கலாம். எனக்குத் தெரிந்தவரை நான் பதில் சொல்கிறேன். நல்ல தோழி கிடைப்பதில் எனக்கும் சந்தோஷம்தானே. நன்றி.

அன்புடன்,
செல்வி.

நான் நலமாக இருக்கிறேன்.அலுவலகத்தில் அதிகம் வேலை இருந்ததால் பதில் அளிப்பதற்கு தாமதமாகி விட்டது தவறாக நினைக்க வேண்டாம். உங்கள் பதில் மிகவும் மகிழ்ச்சியும் ஆதரவையும் தந்தது. அக்கா நான் அலுவலகம் செல்வதால் என் குழந்தையை என் மாமியார் தான் பார்த்து கொள்கிறார்கள் .என் மகளுக்கு இப்பொழுது 1 வயது ஆகிறது ஆனால் இன்னும் நடக்க ஆரம்பிக்கவில்லை டாக்டர் அவளுக்கு எந்த குறையும் இல்லை இன்னும் 2 அல்லது 3 மாதத்திற்குள் நடப்பால் என்கிறார்.வீட்டில் உள்ளவர்கள் காலில் பலம் இல்லாமல் இருந்தால் நடக்க கொஞ்சம் தாமதமாகும் என்கிறார்கள். தினமும் காலை என் மகள் ஒரு இட்லி, ஒரு க்லாஸ் பால் குடித்துவிட்டு 10 மணி போல் தூங்கி விட்டு 12 மணிக்கு எழுந்து பருப்பு சாதம் சாப்பிடுவால் பிறகு 3 மணிக்கு தூங்கி 6 மணி போல் எழுந்து சத்து மாவு சாப்பிடுவால் பிறகு இறவு 1 க்லாஸ் பால் குடித்து விட்டு தூங்கி விடுவால் . என் குழந்தை மீது நான் என் உயிரை வைத்து இருக்கிறேன் அவளை நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் அறிவுடனும் வளர்க்க ஆசை படுகிறேன்.என் ஒரு வயது குழந்தைக்கு என்ன சாப்பாடு கொடுக்கலாம் என்று சொல்வீர்களா??

அக்கா உங்களை பற்றி அதிகம் அறிய ஆசை படுகிறேன். உங்களின் இ மெயில் முகவரி தருவீர்களா??

தயவுசெய்து என்னுடைய ஐடி-யை சகோதரர் பாபு (அட்மின்) அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். நானும் அவருக்கு மெயில் அனுப்பி விட்டேன், என்னுடைய ஐடி-யை தங்களுடைய இமெயிலுக்கு அனுப்பவுமென்று. ஐடி கிடைத்தவுடன் என்னைத் தொடர்பு கொள்ளவும். நன்றி.

அன்புடன்,
செல்வி.

anbudan

HELLO SELVI,

how are u n your family.
can u please give your mail id to me,
i will send my mail id to you through mr.Babu.
then it will be easy to contact you.
if it is ok we will be in touch.
keep in touch, bye bye.

Vidyavasudevan.

anbudan

நலம், நீங்கள் நலமா? தயவுசெய்து என்னுடைய ஐடி-யை சகோதரர் பாபு (அட்மின்) அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். நான் ஏற்கனவே (மே 6, 2007) அவருக்கு மெயில் அனுப்பியுள்ளேன். எதற்கும் உங்கள் இன்பாக்ஸை பாருங்கள். ஐடி கிடைத்தவுடன் என்னைத் தொடர்பு கொள்ளவும். நன்றி.

அன்புடன்,
செல்வி.

anbudan

fine n hope u n your family are fine.
i will get your maid id from admin, and i will contact you, if i get your mail id then ill sure come to meet u in pondicherry. take care of u, selvi.

vidyavasudevan.

anbudan

அரிசி கழுவிய கழுநீரை சூடு செய்து பொறுக்கும் சூட்டில் காலை, மாலை இரு வேளையும் குழந்தையின் கால்களை நன்கு நீவி விட்டு ஊற்றவும். கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும். கவலை வேண்டாம், கூடிய விரைவில் உங்கள் குழந்தை நடப்பாள். நிறைய குழந்தைகள் 1 வயது தாண்டித் தான் நடப்பார்கள். அதற்காக பயப்பட வேண்டாம். உங்கள் குழந்தைக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். குழந்தைக்கு கொடுக்கும் ஆகாரத்தை பற்றி விளக்கமாக பிறகு கூறுகிறேன். நன்றி.

அன்புடன்,
செல்வி.

hi selvi,
how r u?
i am shivashankari.i have a doubt in mushroom biryani.u have mentioned 2 cups of basmati rice.is it 400grams of rice.i am not much familiar with cooking,so i use to get lot of doubts while cooking,so please respond to my mail as early.and oil,u said just 2tsp,is it sufficient.

thanks,
shiva

எப்படியிருக்கீங்க? நான் நலமே. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
2 கப் என்பது 400 கிராம் தான். (நமக்கு தேவையான அளவாகவும் வைத்துக் கொள்ளலாம், ஆனால் 400 கிராமிற்கு மேல் போகக் கூடாது. 400 கிராமிற்கு மேல் தேவையெனில், அதற்கு தகுந்தாற் போல் அளவுகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்).
2 மேசைக்கரண்டி (தேக்கரண்டி அல்ல) எண்ணெய் போதுமானது.
தயிர் சேர்த்து வதக்கும் போது, அதிலிருந்து எண்ணெய் பசை வரும். நீங்கள் விருப்பப்பட்டால் மேலாக 1 ஸ்பூன் நெய் விட்டு கலந்து கொள்ளலாம்.
தெளிவாக சொல்லி விட்டேனென்று நினைக்கிறேன், வேறேதேனும் சந்தேகமிருப்பின் கேளுங்கள்.
வாழ்த்துக்கள், நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

எப்படி இருக்கீங்க? உங்க மகனை கல்லூரியில் சேர்த்துட்டீங்களா?
உங்க வீடு கட்டிமுடிச்சாசா?

நன்றி...

நன்றி...

அன்பு வாணி,
எப்படியிருக்கீங்க? நான் நன்றாக இருக்கேன். (அப்டித்தான் சொல்லிக்கனும்) ரொம்ப நாளாச்சு. எல்லாத்தையும் ஞாபகம் வெச்சட்டு கேக்கிறது ரொம்ப சந்தோஷமாயிருக்கு. மகனை காரைக்காலில் சேர்த்துள்ளோம். இங்கேயே கிடைத்தால் நன்றாக இருக்கும். பார்க்கலாம்.
வீடு கட்டிட்டேஏஏ இருக்கோம். இன்னும் 6 மாசமாகும் போல.
பசங்க எல்லாம் எப்படியிருக்காங்க?
அறுசுவையில் தான் எவ்வளவு மாற்றம். பழைய முகங்களையே காணோமே (மனோகரி உட்பட).
தம்பி பாபு வேறே கலக்கறாரு. (எல்லோரும் அண்ணா, மாமா சொல்றாங்க, நாம தான் தம்பின்னு கூப்பிடுவோமே, வயசு கம்மினாலே இன்னும் 10 வயசு கொறஞ்சுடும் :-))
அப்றம் வெண்கலக் கடையில யானை பூந்த மாதிரி ஹேமா தான் கலக்கிட்டு இருக்காய்ங்க. என்ஞாய். தூள்மா.
நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

**வெண்கலக் கடையில யானை பூந்த மாதிரி ஹேமா தான் கலக்கிட்டு இருக்காய்ங்க.**
ஹேமா இத கவனிக்கலையா?(ஏதோ நம்மால முடிஞ்சது)

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

அன்புள்ள செல்வி மேடம்,

உங்க குறிப்புகள் எல்லாம் வித்தியாசமாக இருக்கு. நிறைய ரெசிப்பீஸ செய்து பார்த்து இருக்கிறேன். எங்களுக்கு புதுசு புதுசா குடுத்திட்டே... இருங்க. நன்றி......

ஹாய் வின்னி,
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. இனிமேல் என் குறிப்புகள் வந்துகிட்டேயிருக்கும் (எனக்கும் உங்கள விட்டா யார் இருக்காங்க). வாழ்த்துக்கள். நன்றி மீண்டும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேம் இன்னிக்கி உங்க காளான் பிரியாணி செய்தேன். ரொம்ப நன்றாக வந்தது. என் அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நன்றி மேம் (உங்களுக்கு பார்சல் அனுப்பினேனே வந்ததா? நீங்க மட்டும் சாப்பிடாம சாருக்கும் கொடுங்க).

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

செல்விமா இன்னிக்கு காளான் பிரியாணி செய்தேன்.சூப்பரா இருந்தது.

hi selvi,thanks for the reply,if possible please send me the recipe for potato sukka.once again thanks.take care.

regards,
shiva