மசாலா முத்து மணி கொழுக்கட்டை

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
மிளகாய் வற்றல் - 10
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - 3 தேக்கரண்டி


 

புழுங்கல் அரிசியையும், பருப்பு வகைகளையும் தனித்தனியாக ஊற வைக்கவும்.
அரிசியை உப்பு போட்டு கெட்டியாக நைசாக அரைக்கவும். அரைத்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடங்கள் ஆவியில் வேக விடவும்.
மிக்ஸியில் பருப்பு வகைகளையும், மிளகாய், உப்பு, பெருங்காயத் தூள் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
அரைத்த பருப்பு வகைகளை அதனுடன் சேர்த்து உதிரி உதிரியாக வரும் வரை வதக்கவும்.
பிறகு வேகவைத்த உருண்டையை அதனுடன் கலந்து நன்கு கிளறி 5 நிமிடம் கழித்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்