பாசிப்பருப்பு பாயசம்

தேதி: April 25, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (3 votes)

 

பாசிப்பருப்பு - 200 கிராம்,
உலர் திராட்சை - 10,
பால் - 1/4 லிட்டர்,
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்,
வெல்லம் - 150 கிராம்,
ஏலக்காய் - 2,
முந்திரி - 10,
நெய் - 2 ஸ்பூன்.


 

பாசிப்பருப்பை சிவக்க வறுத்து வேக விடவும்.
வெந்ததும் மத்தால் நன்கு மசிக்கவும்.
வெல்லத்தை தூள் செய்து, தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, பாசிப்பருப்புடன் சேர்க்கவும்.
பால் சேர்த்து கொதிக்க விடவும்.
நெய்யில் முந்திரி, உலர் திராட்சை எல்லாவற்றையும் வறுத்து நெய்யோடு சேர்த்து, கொதிக்கும் பாயச்த்தில் கொட்டவும்.
ஏலக்காயை தூளாக்கி சேர்த்து, தேங்காய் பாலையும் சேர்த்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Dear madam,
Thick coconutmilk 1 cup means about howmuch ml?

அன்பு நிருபமா,
ஒரு கப் என்பது 200 மிலி அளவு. ஆனால், 150 மிலி தேங்காய்ப்பால் ஊற்றினாலே கூட போதும். நன்றாக இருக்கும். சூடாக சாப்பிடுவதை விட ஃபிரிஜ்ஜில் வைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

Dear selvi madam,
Thanks for your quick reply for clearing my doubt.I like to learn this payasam.I will try this out soon and tell you the feedback.

Thanks
Nirupama

Dear madam,

I tried your payasam today.Taste is very good.Thanks for the nice recipe.Please continue giving nice recipes like this.

அன்பு நிருபமா,
இந்த குறிப்பை கொடுக்கும் போது இதெல்லாம் கொடுக்கணுமான்னு நினைத்தேன். ஆனால், இப்பத்தான் புரியுது.. உங்களை மாதிரி ஆரம்ப கால சமையல் வல்லுனர்களுக்கு இது போன்ற குறிப்புகளும் தேவைன்னு. கண்டிப்பா எனக்கு தெரிஞ்ச குறிப்பெல்லாம் கொடுக்கிறேன். பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

Thanks for your reply.

செல்வி அம்மா என்ன இப்பிடி சொல்லி போட்டீக... நம்ம மக்க்ளுக்கு சுடுதண்ணி வைக்க கோட ரெசிபி போடோனுங

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..