இறால் கொழுக்கட்டை

தேதி: April 26, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

அறுசுவையில் ஏராளமான இஸ்லாமிய உணவுக்குறிப்புகள் வழங்கி வரும் <a href="experts/1377" target="_blank"> திருமதி. செய்யது கதீஜா</a> அவர்களின் தயாரிப்பு இந்த இறால் கொழுக்கட்டை.

 

இறால் - 10
வெங்காயம் - 1(பெரியது) சின்ன வெங்காயம் என்றால் 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 2
மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
அரிசி மாவு - ஒன்றரை கப்
கீரைப்பொடி - ஒன்றரை மேசைக்கரண்டி


 

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் நறுக்கின வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு, மஞ்சள் தூள், மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்க்கவும்.
அதில் வரட்டிய இறால் சேர்த்து தீயை குறைத்து வைத்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வெந்து நன்கு வதங்கியதும் கீரைப்பொடியை சேர்த்து சிறிது நேரம் கிளறி பின்னர் இறக்கவும்.
பின்பு அரிசிமாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வதக்கிய வெங்காய இறால் கலவையை அதில் கொட்டவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு பிசையவும். சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். பின்னர் அவற்றை கொழுக்கட்டை அச்சில் வைத்தோ அல்லது கையினாலோ கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும்.
எல்லா மாவையும் தேவையான அளவில் சிறிய அல்லது பெரிய கொழுக்கட்டைகளாக பிடித்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் இட்லி தட்டு அல்லது ஸ்ட்டீமரை வைத்து அதன் மேல் கொழுக்கட்டைகளை வைத்து மூடி, குறைந்த தீயில் வேகவிடவும்.
சுமார் 15 நிமிடங்கள் வெந்ததும் பாத்திரத்தை இறக்கி கொழுக்கட்டைகளை வெளியில் எடுக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்