பக்கத்து வீட்டார் பாலிஸி

பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சுமூகமான முறையில் பழகுவது என்பது அவ்வளவு சுலபமில்லை என்பதை, நானும் எனது அனுபவத்தில் அறிந்துள்ளேன். ஆனால் அதற்க்காக அவர்களை தவிர்த்து விட்டு அதற்க்கும் அடுத்த வீட்டுக்காரர்களிடம் பழகுவதை நான் விரும்புவதில்லை. காரணம் நமக்கு ஒரு அவசரம் என்று வந்து விட்டால் முதலில் பக்கத்து விட்டு காரர்களிடம் தான் செல்ல வாய்ப்பு இருக்குமே ஒழிய மற்றவர்களைத் தேடிக் கொண்டிருக்க சில நேரங்களில் அவகாசம் இருக்காமல் போய்விடும். ஆகவே நமக்கு அருகில் வசிப்பவர்களிடம் தான் நாம் அதிக அளவில் நட்பான உறவுடன் பழக வேண்டும். அதற்க்கு பிறகு தான் மற்றவர்கள் என்ற மனப்பான்மைய்யை வளர்த்துக் கொள்வதுதான் நல்லது என்று கருதுகின்றேன்.

எப்பொழுதும் எல்லோரிடமும் அன்பாகவும், ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமளிக்காமல், எல்லோரையும் சரிசமமாக மதித்து நடந்துக் கொள்ளும் மனப்பான்மைய்யை வளர்த்துக் கொண்டால் ஒரு பிரச்சனையும் வராது.எவ்வளவு மோசமான நெய்பரானாலும் சமாளித்து விடலாம். ஆனால் அந்த மனப்பக்குவத்தை பெறுவது எப்படி என்று எனக்கு தெரிந்ததை கூறுகின்றேன்.

1.முதலில் நாம் நம்முடைய பக்கத்துவிட்டுக்காரர்களை அன்போடு வரவேற்க்க வேண்டும். புதிதாக குடி வருபவரிடம் நாம் தான் முதலில் சென்று நம்மை அறிமுகப் படுத்தி கொள்ள வேண்டும்.அல்லது நாமாக பக்கத்து வீட்டுக்காரர்களை தேடிச் சென்று நம்மை அறிமுகப் படுத்திக் கொள்ளவேண்டும்.

2.அவர்களின் வீட்டிற்க்கு நாமாகவே பூக்கள், அல்லது பழங்களை வாங்கிச் சென்று நமது அன்பை வெளிபடுத்த வேண்டும். இந்த அனுகு முறையால் ஆரம்பத்திலிருந்தே இரு தரப்பினர்களுக்கும் ஒரு நட்பை வளர்க்க முடியும்.

3.பக்கத்துவீட்டூக்காரர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் எதிர் பாராத நேரத்தில் கூட சிறிய சிறிய பரிசுப் பொருட்களை வாங்கி பரிசளிக்க வேண்டும். இந்த முறையால் நம் வீட்டு குழந்தைகள் கூட ஆதாயம் பார்க்காமல் மற்றவரை நேசிக்கும் மனபக்குவம் அடைய நாம் வழிவகுக்கலாம்.

4.பொதுவாக பக்கத்து விட்டுக்காரர்களிடம் நாம் ஏதாவது ஒரு பொருளை கொடுத்தோமானால் அதை அவர்கள் திருப்பி கொடுக்கா விட்டால் அதை அவர்களுக்கு நேரிடையாக கேட்டு வாங்கிக் கொள்ளவேண்டும். அதற்க்காக அவர்களை பகைத்துக் கொள்ள கூடாது. அதை திருப்பி கொடுக்க அவர்களுக்கு மறதி கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

5.அவர்களிடம் எந்த விசயமாக இருந்தாலும் பேசி முடிவெடுக்க வேண்டும். பேசாமல் மவுனமாக இருந்துக் கொள்வதால் இரண்டு தரப்பினருக்கும் எந்த பயனுமில்லை.

6.அவர்களுக்கு மற்றவரின் உதவிகள் தேவைப்படும் சந்தர்பங்களில், அவர்கள் கேட்கும் வரை காத்திருக்காமல் நாமாகவே உதவிச் செய்ய முன்செல்ல வேண்டும். இதனால் நம்முடைய்ய பரந்த மனப்பான்மையை அவர்கள் புரிந்துக் கொள்ள நேரிடும்.

7.சில நெய்பர்ஸ் ஏதாவது பக்கத்து வீட்டுக்காரரிடம் இனாமாக வாங்குவதிலேயே குறியாக இருப்பார்கள். அதைப் போன்ற குணம்படைத்தவரிடம் நாம் எதையுமே கடனாக கூட வாங்க கூடாது. இதனால் அவர்கள் நம்மிடம் இனாம் கேட்பதை நாளடைவில் நிறுத்திக் கொள்வார்கள்.

8.பக்கத்து வீட்டுக்காரர்களையும் மதித்து நம் வீட்டிற்க்கு விருந்துக்கு அழைத்து உபசரிக்க வேண்டும்.இதனால் உங்களை அவர்கள் உள்ளலவிலும் மறக்க மாட்டார்கள்.

9.கோடை விடுமுறைக்கோ, அல்லது வேறு பல சந்தர்பங்களில் கூட அவர்கள் வீட்டை விட்டு செல்ல நேரிட்டால் அவர்களின் அன்றாட விசயங்களான, செய்தி தாள்கள்,தபால்கள்,பால் காரர்,மற்றும் அவர்களின் பராமரிபில்லாமல் வாடிவிடக் கூடிய செடி கொடிகளை பராமரித்தல், வீட்டுப் பிராணிகளையும் பொருப்பாக பாதுகாத்தல் போன்ற விசயங்களை பொருப்பேற்றுக் கொள்ள முடிந்த வரையில் உத்தரவாதம் தர வேண்டும். முடியா விட்டால் நேரிடையாக கூறி வேறு ஏதாவது முறையில் அவர்களுக்கு உதவ முயர்ச்சிக்க வேண்டும்.இதனால் நம்முடைய்ய உடமைகளுக்கும் கூட அவசர நேரத்தில் அவர்களால் பாதுகாப்பு கிடைக்கும்.

10.பக்கத்து வீட்டில் நடக்கும் எந்த பிரச்சனையும் நமக்கு அது பிரச்சனையாக தெரிந்தால் கண்டும், காணாமலும் இருக்க கூடாது. நாமாக அதைப் பற்றி கேட்டு உதவ முன் வர வேண்டும். அதை பற்றி அவர்கள் மேற்கொண்டு நம்மிடம் கூறுவதும், கூறாமல் இருப்பதும் அவர்கள் இஷ்டத்தைப் பொருத்தது, நம்மிடம் கூறவில்லையே என்று அதைப் பற்றி நாம் கவலைப் படக்கூடாது.

11.அதைப் போலவே நம் வீட்டு பிரச்சனைகளைகூட அவர்களிடம் நட்பான முறையில் அவர்களின் ஆலோசனைக் கேட்க்க தயங்கக் கூடாது. இதனால் அவர்கள் நம்மை மேலும் அதிகமாக நேசிக்கவும், நம்மை மதிக்க நாமே ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

12.அவர்களின் செயல்கள் நமக்கு பிடிக்க வில்லையென்றால் அதை அவர்களிடம் நேரிடைய்யாக எடுத்து சொல்ல வேண்டும். பிரச்சனையை பிரச்சனையாக அனுககூடாது. அன்பான முறையினால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்.

இவ்வாறு பக்கத்துவீட்டுக்காரர்களிடம் அன்பாக பழகுவதோடு நமது கடமை முடிந்து விடுவதில்லை. அவர்களை தட்டிக் கேட்கவும் தயங்கக் கூடாது.

1.முக்கியமாக குழந்தைகளை அடித்து கண்டிக்கும் பெற்றொருடைய்ய நெய்பராக இருந்தால் அவர்களை நேரிடையாக அதைப் பற்றி விசாரிக்க வேண்டும். குழந்தைகளை அடித்து துண்புருத்துவது தவறு என்று எடுத்துரைக்க வேண்டும். அதற்க்கு அவர்கள் தகுந்த பதிலக்க தவறுபவர்களை அந்த குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, அவர்களுக்கு எதிராக அதற்க்குறிய நடவ்டிக்கைகளை எடுக்க தயங்கக் கூடாது.

2.அதேப்போல் வீட்டு பிராணிகளையும் அவர்கள் பரமரிப்பதில் குறை தெரிந்தாலும் அவர்களிடம் நேரிடைய்யாக கூறவேண்டும். அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் தகுந்த நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது. வாயில்லாத ஜீவன்களையும் காப்பாற்றுவது கூட நமது கடமைகளில் தலைய்யாய கடமை என்று கருத வேண்டும்.

இவ்வாறு நாம் ஒவ்வொறுவரும் பக்கத்து வீட்டையும் நம்முடைய்ய வீடாகவும், அதில் வாழ்பவரையும் நம்மக்கள் என்ற உணர்வோடும் நாம் வாழ்ந்தோமானால்,பிறகு நமக்கு எதிராக செயல்படும் திருட்டு, கொள்ளை போன்ற சமூக விரோதச் செயல்கள் கூட, வளரவிடாமல் தடுக்க வழிவகுக்கும் என்ற கருதை கூறி முடிக்கின்றேன்.
அன்பு நேயர்களே நீங்களும் இந்த பக்கத்து வீட்டாரைக் குறித்த உங்களுக்கு ஏற்ப்பட்ட அனுபவங்கள், கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள், மற்றும் ஆலோசனைகளையும் பகிர்ந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.கட்டாயம் அது மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புவோம். நன்றி.

மேலும் சில பதிவுகள்