கருப்பு உளுந்து தோசை

தேதி: May 1, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கலரிசி- 1 கப்
பச்சரிசி- 1 கப்
கருப்பு உளுந்து- அரை கப்
மிளகு- 1 ஸ்பூன்
தேங்காய்த்துருவல்- அரை கப்
இஞ்சித்துருவல்- 1 ஸ்பூன்
தேவையான உப்பு
கறிவேப்பிலை- ஒரு பிடி


 

அரிசி வகைகளை முந்தின தினம் இரவு ஊறவைக்கவும்.
மறுநாள் காலை அரைக்கவும்.
அது பாதி அரைபட்டதும் கருப்பு உளுந்தை நன்கு கழுவிச் சேர்க்கவும்.
அத்துடன் மிளகு, இஞ்சி சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்த மாவில் தேவையான உப்பு கலந்து 4 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
தோசை சுடும்போது கறிவேப்பிலை, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலந்து சுடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹல்லோ மனோ மேடம், இந்த தோசைக்கு ' தால் மக்கனிக்கு' பயன்படுத்தும் முழு கருப்பு உளூந்து பயன்படுத்தலாமா

உடைத்த கறுப்பு உளுந்தைத்தான் இந்த தோசைக்கு நான் பயன்படுத்தியிருக்கிறேன். உடைத்த கறுப்பு உளுந்தை ஊற வைக்காமல் கழுவி உடனேயே அரைக்க வேண்டும் என்பதால் பாதியாக உடைக்கப்பட்டிருப்பதால்தான் உடனேயே அரைபட முடிகிறது என நான் நினைக்கிறேன்.முழு கறுப்பு உளுந்து அதுபோல கழுவியதும் அரைபடுமா எனத் தெரியவில்லை.

அன்புள்ள மனோ மேடம், நான் இந்த குறிப்பில் உடைத்த உளூந்துக்கு பதில் கருப்பு முழு உளூந்தை உற வைத்து செய்து பார்த்தேன் .நன்றாய் வந்தது. நன்றி மேடம்.