கனேடியன் சிக்கன் கறி

தேதி: May 2, 2007

பரிமாறும் அளவு: 4-5நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - அரைக்கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - இரண்டு பற்கள்
நறுக்கிய தக்காளி - ஒரு கேன் 398ml
பால் - அரைக்கோப்பை
சோளமாவு - இரண்டு தேக்கரண்டி
ரெடிமேட் கறி பவுடர் - இரண்டு தேக்கரண்டி
பட்டையின் தூள் - அரை தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - இரண்டு
நறுக்கிய பார்ஸ்லி - கால் கோப்பை
உலர்ந்த ஏப்ரிகாட்பழம் நறுக்கியது - கால் கோப்பை
உலர்ந்த பைனாப்பிள் - கால் கோப்பை
சிக்கன் ஸ்டாக் - ஒன்றரைக் கோப்பை
கனோலா ஆயில் - இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி


 

சிக்கனின் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பூண்டை துருவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி காயவைத்து வெங்காயம் பூண்டைப் போட்டு வதக்கவும். தொடர்ந்து சிக்கனைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு எல்லாத்தூளையும் போட்டு தக்காளியையும் உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.
பிறகு பழங்களைப் போட்டு சிக்கன் ஸ்டாக்கையும் ஊற்றி நன்கு கலக்கி விட்டு கொதிக்க விடவும்.
பிறகு அடுப்பை மிகவும் குறைவான அனலில் வைத்து மூடியைப் போட்டு வேகவிடவும்.
பிறகு அரைமணிநேரம் கழித்து பாலில் சோளமாவை கரைத்து குழம்பில் ஊற்றி நன்கு கலக்கி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
அதன் பிறகு நறுக்கிய பார்ஸ்லி தழையை மேலாகப் போட்டு ஒயிட் ரைஸுடன் சூடாகப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்