சிக்கன் மசாலா தோசை

தேதி: May 2, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தோசை மாவு - ஒரு லிட்டர்
சிக்கன் நெஞ்சு பகுதி - 500 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
மல்லி கீரை - ஒரு பிடி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகுப்பொடி- அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி


 

முதலில் இறைச்சியை கழுவி முள் நீக்கி வைக்கவும், வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்,
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும், பின்பு அதில் இறைச்சியை போட்டு வேக விடவும் வெந்த பின்பு எடுத்து ஆற விடவும்.
பின்பு மிக்ஸியில் இட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்,
பின்பு ஒரு நாண்ஸ்டிக் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
பின்பு அரைத்த இறைச்சியை போட்டு கிளறவும். பின்பு மிளகாய்பொடியை போட்டு கிளறவும்.
பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி கீரை ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கிய பின்பு எல்லா மசாலா பொருட்களையும் சேர்த்து உப்பு சேர்க்கவும். வெந்த பின்பு இறக்கி ஆறவிடவும்.
பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் மெல்லிய தோசையாக இடவும், அதன் மேல் சிக்கன் மசாலாவை மேலே பரவினாற்போல் இடவும். மேலேயும் ஓரத்திலும் சிறிது எண்ணெய் விடவும் தோசை முறுகி வந்ததும் திருப்பி போடாமல் எடுக்கவும். இதுவே சிக்கன் மசாலா தோசை.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரஸியாஅக்கா உங்களுடைய குறிப்பில் இருந்த சிக்கன் மசாலாதோசை மிகமிகசுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்டசுவையானகுறிப்பைதந்ததிற்குஉங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

எப்படி இருக்கீங்க?சிக்கன் மசாலா தோசை செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு ரொம்ப நன்றிமா!!