காரட் வறுவல்

தேதி: May 2, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

காரட் - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி+ஒரு தேக்கரண்டி


 

காரட்டை தோல் சீவி மெல்லிய வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தேங்காய், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து நறுக்கின வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள், உப்பு, தேங்காய் விழுது சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி கிளறி மூடி வைத்து வேக விடவும்.
இரண்டு நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நன்கு கிளறி விட்டு வேகவிடவும். மூன்று நிமிடம் கிளறி பின்னர் இறக்கவும்.
எளிய முறையில் செய்யக் கூடிய சத்தான கேரட் வறுவல் தயார். இந்த காரட் வறுவலை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. ஜோதி கோவிந்தராஜ் அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

to do like this we can eat raw carrot.

hi don't give this sort of comment

nice n diff recipe...wil try sometime