கத்தரிக்காய் கடைச்சல்

தேதி: May 2, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - 4
உருளைக்கிழங்கு - ஒன்று
வெங்காயம் - ஒன்று
நாட்டுத்தக்காளி - 4
பச்சைமிளகாய் - 4
பூண்டு - 4 பல்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இலை


 

வெங்காயம், தக்காளி, கத்தரிக்காயை அரிந்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி அரிந்து கொள்ளவும்.
தாளிக்கும் பொருட்களைத் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு வேகவைத்துக் கொள்ளவும். வெந்தவற்றை நன்கு கடைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து கறிவேப்பிலை சேர்த்து அதனை வேகவைத்த காய்களுடன் சேர்க்கவும்.


நாட்டுத்தக்காளி இல்லை என்றால் சிறிது புளி சேர்த்துக் கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்