ஈஸி சிக்கன் குருமா

தேதி: May 2, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

சிக்கன் - அரை கிலோ
ரெடிமேட் சிக்கன் மசாலா - 25 கிராம்
தேங்காய் பால் - ஒரு கப்
வெங்காயம்(பெரியது) - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - 10 இலை
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி


 

சிக்கனை கழுவி, அதனுடன் தேங்காய்பால், அரை தேக்கரண்டி உப்பு மற்றும் ரெடிமேட் சிக்கன் மசாலாவை கலந்து குளிர்சாதனப்பெட்டியில் அரை மணி நேரம் வைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் தக்காளியை அரிந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும். குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ள சிக்கனை எடுத்து சேர்க்கவும்.
5 நிமிடம் வதக்கி விட்டு உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் விட்டு சிக்கனை வேக வைக்கவும். சிக்கன் வெந்தவுடன் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்