சீஸ் பிஸ்க்கட்ஸ்

தேதி: May 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - இரண்டு கோப்பை
பேக்கிங் பவுடர் - இரண்டு தேக்கரண்டி
பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி
தயிர் - அரைக்கோப்பை
துருவிய சேடார் சீஸ் - ஒரு கோப்பை
பால் - அரைக்கோப்பை
வெண்ணெய் - கால் கோப்பை
நறுக்கிய வெங்காயத்தாள் - நான்கு
நறுக்கிய தில் தழை - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி


 

மைதாவுடன் உப்பு, மிளகுத்தூள், பேக்கிங் பவுடர், சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு அதனுடன் சீஸ்ஸையும் தில் தழையையும் சேர்த்து கலந்து வைக்கவும்.
ஒரு சிறிய கோப்பையில் தயிர், பால், வெண்ணெய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளையும் சேர்த்து நன்கு கலக்கி மாவுக் கலவையில் போட்டு பிசையவும்.
அழுத்தி பிசைய வேண்டாம். எல்லாம் ஒன்றோடு ஒன்று சேரும்வரை பிசைந்தால் போதும்.
பிறகு அவனை 400 டிகிரி Fல் வைக்கவும். தயாரித்த கலவையை பேக்கிங் செய்யும் தட்டில் பன்னிரெண்டு பாகங்களாக பிரித்து வைத்து பேக் செய்யவும்.
பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை வேகவைத்து பிஸ்கட் இளஞ்சிவப்பாக ஆனவுடன் வெளியில் எடுத்து ஆறவிடவும்.
இந்த சுவையான பிஸ்கட்டை சூடான வெஜிடபிள் சூப்புடன் முழு உணவாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்