அறுசுவை நேயர்களிடம் உதவி கேட்டு ஒரு பணிவான விண்ணப்பம்

கேட்கலாமா, வேண்டாமா என்ற தயக்கம் நீண்ட நாட்களாக இருந்தது. வேறு வழி இல்லாததால், தயக்கத்தை உதறி உங்களிடம் இந்த உதவி கேட்கின்றேன்.

நீண்ட நாட்களாக நான் அறுசுவை ஆங்கில பதிப்பை கொண்டு வருவது பற்றி குறிப்பிட்டு வருகின்றேன். கிட்டத்திட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்பே இதைப் பற்றி பேச ஆரம்பித்தேன். இருதாலும் இன்று வரை ஆங்கிலத் தளத்தை கொண்டு வர முடியவில்லை. பல காரணங்கள். என்னால் முழுமையாக இறங்கி ஆங்கில தள வேலைகளில் ஈடுபட முடியாத அளவிற்கு மற்ற வேலைகள் தடுக்கின்றன. நான் தனி ஒருவனாக அறுசுவை சம்பந்தமான, பெரும்பாலான வேலைகளைச் செய்து வருவதால், அதற்கு நேரம் ஒதுக்குவது மிகவும் கடினமாக இருக்கின்றது. இருந்த போதிலும் ஆங்கில இணையத்தள நிரல்கள், வடிவமைப்பு, படங்கள் ஆக்கம்.. போன்ற வேலைகளை ஒருவாறு முடித்துவிட்டேன். அறுசுவை தமிழ் தளத்தில் உள்ள குறிப்புகளை மொழிபெயர்ப்பு செய்யும் பணி இன்னும் முடிவடையாமல் இருக்கின்றது.

கிட்டத்திட்ட நான்கு ஆயிரத்துக்கும் அதிகமான குறிப்புகள் உள்ளன. மொழிபெயர்ப்பில் எனக்கு சிலர் உதவுவதாக கூறியிருக்கின்றார்கள். சிலர் ஏற்கனவே உதவியும் வருகின்றனர். இருப்பினும் 4000 குறிப்புகளையும் மொழிபெயர்த்தல் என்பது மிகவும் சுலபமான வேலை அல்ல. அறுசுவை நேயர்கள் உதவினால் இவற்றை கொஞ்சம் எளிதாக முடித்துவிடலாம் என்று நம்புகின்றேன். ஆர்வமும், நேரமும் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொண்டால், எந்தெந்தக் குறிப்புகளை மொழிபெயர்ப்பு செய்யவேண்டும் என்பதை தனிப்பட்ட மின்னஞ்சலில் தெரிவிக்கின்றேன். இருக்கும் குறிப்புகளை பலர் பகிர்ந்து கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக மொழிபெயர்ப்பு செய்தால் விரைவில் முடித்து விடலாம் என்று நம்புகின்றேன்.

இந்த உதவியை ஒருவித தயக்கத்துடன்தான் உங்களிடம் கேட்கின்றேன். இயன்றவர்கள் எனக்கு உதவலாம். அப்படி உதவ முன்வருகின்றவர்கள் கீழே "தொடர்புக்கு" என்று உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து, அந்த பக்கத்தின் மூலம் (அதாவது feedback) என்னை தொடர்பு கொள்ளலாம். நான் பதில் கொடுப்பதற்கு வசதியாக தங்களது மின்னஞ்சல் முகவரியையும் அதில் தெரியப்படுத்தவும். பெயர்பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் இங்கேயே தங்களது விருப்பத்தை எனக்குத் தெரிவிக்கலாம். நான் தங்களைத் தொடர்பு கொள்கின்றேன்.

அன்புடன்
பாபு

திரு அட்மின் அவர்களுக்கு, எப்படி இருக்கின்றீர்கள்? பேசி அதிக நாட்கள் ஆகிவிட்டதென்று நினைக்கின்றேன்.தங்களின் விண்ணப்பத்தைப் பார்த்தேன். இதற்க்கு போய் ஏன் இவ்வளவு தயக்கம்! நிச்சயமாக தங்களுக்கு உதவ முன்வந்துள்ளேன்.ஆகவே மேற்க்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று கூறவும்.நன்றி.

சகோதரி அவர்களுக்கு,

இதிலும் முதல் நபராய் முன்வந்து உதவ வந்தமைக்கு மிக்க நன்றி.

பேசி அதிக நாட்கள் ஆகிவிட்டது உண்மைதான். கடந்த இரண்டு வாரமாக அறுசுவை பக்கம் அதிகம் வரமுடியவில்லை. சென்னை அலுவலகம் திறப்பது சம்பந்தமாக நிறைய வேலைகள். வேறு சில வேலைகளை முன்னிட்டும் வெளியில் அலைந்து கொண்டிருக்கின்றேன். 5 நாட்களுக்கு பிறகு நேற்றுதான் இண்டெர்நெட்டில் நுழைந்தேன். ஆங்கிலத்தள பணிகளை சற்று முழுமூச்சில் ஆரம்பித்து முடிக்க வேண்டியுள்ள கட்டாயம் உள்ளதால், இந்த உதவியை கோரியுள்ளேன்.

தனிநபர் குறிப்புகளில் உங்களது குறிப்புகள்தான் அறுசுவையில் அதிகம். இதே கூட்டாஞ்சோறு பகுதி ஆங்கில தளத்தில் EXPERTS என்ற தலைப்பில் இடம்பெறும். அங்கு உங்கள் குறிப்புகளை நீங்கள் ஆங்கிலத்தில் சேர்க்கலாம். ஆகவே உங்கள் குறிப்புகளை மொழிமாற்றம் செய்து நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஆங்கிலத் தளம் வெளியானவுடன் அவற்றில் இப்போது கூட்டாஞ்சோறு பகுதியில் சேர்ப்பதுபோல் சேர்த்துவிடுலாம்.

எல்லாவற்றையும் இப்போதே மொழிபெயர்த்து வைத்துவிட்டால், நாள் ஒன்றுக்கு பத்து பத்தாக குறிப்புகளாக சேர்த்துவிடலாம். உங்களின் வசதியையும், நேரத்தையும் பார்த்துக்கொள்ளவும். உங்கள் குறிப்புகள் தவிர பிறர் குறிப்புகளையும் மொழிபெயர்க்க இயலும் என்றால் எனக்கு தெரிவிக்கவும். எந்த குறிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து மொழிபெயர்ப்பு செய்யவேண்டும் என்பதை தங்களுக்கு தனி மின்னஞ்சலில் தெரிவிக்கின்றேன்.

எனது வேண்டுகோளுக்கு உடனே பதில் கொடுத்தமைக்கு மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

பாலம் கட்ட அணில் உதவியது போல்(அப்படீன்னு சொல்வாங்க..) நான் கூட உங்களுக்கு உதவ முடியுமென்று நினைக்கிறேன். நான் ஏற்கனவே இதுபோன்ற வேலை செய்துள்ளேன். என்னால் முடிந்தவரை செய்கிறேன், தயக்கமேன் சகோதரா? நன்றி.

அன்புடன்,
செல்வி.

இதிலென்ன தயக்கம் அண்ணா!
நானும் நிச்சயம் தங்களுக்கு உதவ முன்வருகிறேன்.
என் குறிப்புகள் மட்டுமன்றி மற்ற குறிப்புகள் ஏதேனும் மொழிபெயர்ப்பு செய்யவேண்டும் என்றாலும் குறிப்பிடுங்கள். நான் முயன்றவரை செய்கிறேன்.

நன்றி...

நன்றி...

மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. இப்படி ஒரு ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் நான் இந்த கோரிக்கையை ஒரு வருடத்திற்கு முன்பே வைத்து, ஆங்கிலத் தள வேலைகளை என்றோ வெற்றிகரமாக முடித்து இருப்பேன்:-) ஏனோ எனக்குள் இருந்த ஒரு தயக்கம், இப்படி தாமதப்படுத்த வைத்துவிட்டது.

அறுசுவையை அனைத்து இந்திய மொழிகளிலும் கொண்டு வரவேண்டும் என்பதுதான் எனது இலக்கு. அதற்கு முதலில் ஆங்கிலத்தில் கொண்டு வந்தால்தான் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்வது எளிதாக இருக்கும்.

சகோதரி மனோகரி அவர்களுக்கு கொடுத்த பதிலையே தங்களுக்கும் கொடுக்க விரும்புகின்றேன். கூட்டாஞ்சோறு பகுதியில் இடம்பெற்றுள்ள குறிப்புகள் மட்டும் (இந்த நிமிடம் வரை) 1907 உள்ளன. இவை மொழிபெயர்க்கப்பட்டாலே கிட்டத்திட்ட பாதி அறுசுவையை மொழிபெயர்த்த மாதிரிதான். கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள் அனைவராலும் அவர்களது குறிப்புகளை மொழிபெயர்த்தல் சிரமம் என்று எண்ணுகின்றேன்.

உங்களது குறிப்புகளை முதலில் நீங்கள் மொழிபெயர்த்து விடுங்கள். பின்னர் நேரம் கிட்டும்போது மற்றவர்கள் குறிப்புகளை மொழிபெயர்க்க உதவிடுங்கள்.

கூட்டாஞ்சோறு அங்கத்தினர் அனைவருக்குமான எனது வேண்டுகோள். கூட்டாஞ்சோறு பகுதியில் இடம்பெற்றுள்ள உங்களது குறிப்புகளை ஆங்கிலத்தில் நீங்கள் மொழிமாற்றம் செய்ய இயலும் என்றால், முதல்கட்டமாக உங்களது குறிப்புகள் அனைத்தையும் மொழிமாற்றம் செய்துவிடுங்கள். அதன்பிறகு தங்களால் இயன்றால், இயலாதவர் குறிப்புகளையும், இதர குறிப்புகளையும் மொழிபெயர்க்க உதவிடுங்கள்.

உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நான் ஒருவருக்கு பதில் கொடுத்து முடிப்பதற்குள் அடுத்து ஒருவர் உதவிக்கரம் நீட்டி வந்துவிடுகின்றார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. வெறும் வார்த்தைகளால் மட்டுமே நன்றி தெரிவிக்கும் நிலையில் நான் தற்போது இருக்கின்றேன். நன்றி.. நன்றி..

சகோதரி வாணி அவர்களுக்கு, உங்களது குறிப்புகளை மொழிபெயர்த்து முடித்தவுடன் எனக்கு தெரியப்படுத்துங்கள். அடுத்த கட்டமாக மொழிபெயர்ப்பு செய்யவேண்டியவற்றை நான் தங்களுக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கின்றேன்.

எனது குறிப்புகள் குறைந்த அளவே உள்ளதால் அவற்றை சீக்கிரமாக மொழிபெயர்த்துவிடுவேன். நிச்சயம் மொழிபெயர்த்தவுடன் தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
நன்றி!

நன்றி...

ஒகே அட்மின். என்னுடைய்ய குறிப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைக்கின்றேன். மேலும் மற்றவர்களின் குறிப்புகளைக் கூட மொழிபெயர்ப்பதிலும் ஆர்வமாயிருக்கின்றேன். ஆகவே கட்டாயம் எனக்கு அதைப் பற்றி தெரியப்படுத்தும் படி கேட்டுக் கொள்கின்றேன்.தயக்கம் வேண்டாம். நன்றி.

சகோதரி அவர்களுக்கு,

மிகவும் நன்றி. மற்றவர்களின் எந்தெந்த குறிப்புகளை மொழிபெயர்ப்பு செய்யவேண்டும் என்பதை விரைவில் தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துகின்றேன்.

When we benefit from your site, we wish, in turn we must do something for your betterment. No wonder there are many people ready to offer you a hand in your works. Because you are such a wonderful person and we know how hard you are working for this site's development.

It will be a great pleasure if I able to help you in your works in anyway. If you believe that I could be of any assistance, please drop me a mail. I dont think, I am familiar with all the Tamil fooditem names. I have seen many unfamiliar tamil food names in arusuvai. For example, I dont know what is "Pirandai"? I would appreciate your assistance in this regard. Thank you.

மேலும் சில பதிவுகள்