கத்தரிக்காய் குருமா

தேதி: May 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - கால் கிலோ
கேரட் - இரண்டு
குடைமிளகாய் - ஒன்று
பச்சை பட்டாணி - கால் கப்
வெங்காயம் - ஒன்று(பெரியது)
தக்காளி - இரண்டு
பச்சைமிளகாய் - ஐந்து
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
தயிர் - இரண்டு மேசைக்கரண்டி
பட்டை - இரண்டு
கிராம்பு - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் பால் - அரை கப்
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி


 

காய்களை அரிந்து வைத்துக் கொள்ளவும். பட்டை, கிராம்பு, ஏலக்காயை மிக்ஸியில் பொடி செய்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறவும்.
பிறகு கத்தரிக்காய், கேரட் சேர்த்து வதக்கவும். தயிர் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் வற்றியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு தனியாத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும். இப்போது குடைமிளகாய் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி விட்டு நான்கு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.
காய்கள் வெந்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்