பார்லி & ரைஸ் புலாவ்

தேதி: May 4, 2007

பரிமாறும் அளவு: 4-5நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பியர்ல் பார்லி - ஒரு கோப்பை
லாங் கிரைன் ரைஸ் - ஒரு கோப்பை
சிவப்பு, மஞ்சள்நிற குடைமிளகாய் - தலா அரைக்கோப்பை
நறுக்கிய வெங்காயம் - ஒரு கோப்பை
நறுக்கிய செலரி - ஒரு கோப்பை
ஃபுரோஜன் பச்சைபட்டாணி - அரைக்கோப்பை
நசுக்கிய பூண்டு - இரண்டு பற்கள்
சிக்கன் ஸ்டாக் - நான்கு கோப்பை
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி
கனோலா ஆயில் - ஒரு மேசைக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பிரிஞ்சி இலை - இரண்டு
பேஸில் இலை - இரண்டு மேசைக்கரண்டி


 

அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய், வெண்ணெய்யை கலந்து ஊற்றி பூண்டு, செலரி மற்றும் வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்.
பிறகு அரிசியையும், பார்லியையும் போட்டு ஒரு ஐந்து நிமிடத்திற்கு வதக்கி விட்டு சிக்கன் ஸ்டாக்கை ஊற்றவும்.
பிறகு அதில் மீதியுள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு நன்கு கலக்கி கொதிக்க விடவும். நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அனலைக் குறைத்து வைத்து மூடியைப் போட்டு வேகவிடவும்.
முக்கால் மணி நேரம் கழித்து இலேசாக கிளறிவிட்டு இறக்கி சூடாகவோ அல்லது குளிர்வித்தோ பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்