லென்டில் சூப்

தேதி: May 4, 2007

பரிமாறும் அளவு: 8நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சைநிற லென்டில் - ஒரு கோப்பை
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரைக்கோப்பை
நறுக்கிய கேபேஜ் - இரண்டு கோப்பை
நறுக்கிய செலரி - ஒரு கோப்பை
நறுக்கிய கேரட் - ஒரு கோப்பை
நறுக்கிய காளான் - ஒரு கோப்பை
நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒரு கோப்பை
நறுக்கிய குடைமிளகாய் - ஒரு கோப்பை
சிக்கன் ஸ்டாக் - ஆறுக் கோப்பை
நறுக்கிய தக்காளி - ஒரு கேன் 796 மிலி
உலர்ந்த தைம் இலை - அரைதேக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
ஆலீவ் ஆயில் - இரண்டு மேசைக்கரண்டி


 

அடிகனமான ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், காளானைப் போட்டு வதக்கவும்.
பிறகு மற்ற பொருட்களையும் ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கி சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி கலக்கவும்.
தொடர்ந்து லென்டிலையும் சேர்த்து கலக்கிவிட்டு மூடிப்போட்டு கொதிக்கவிடவும். சூப் கொதிக்கும் பொழுது அடுப்பின் அனலை குறைத்து வைத்து வேகவிடவும்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து லென்டில் நன்கு வெந்திருப்பதை உறுதி செய்துக் கொண்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
டோஸ்ட் செய்த கார்லிக் பிரட்டுடன் சூடாக பரிமாறவும்.
இந்த சுவையான சத்து நிறைந்த சூப், மத்திய உணவிற்கு எடுத்து செல்லக்கூடியதாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹல்லொ மனோஹரி மேடம் இன்னிக்கி ஆஃபிஸ்ல கொஞ்சம் ஃப்ரீ. உங்களுடைய ரெஸிபிகள் தான் ப்ரின்ட் பண்ணிட்டு இருக்கேன் :) பச்சை லென்டில் என்றால் என்ன? மங்க் தால் என்று சொல்வோமே அதுவா? அதோட இங்லிஷ் பெயர் சொல்ல முடியுமா?

BTW உங்களோட மெட்ராஸ் மீன் குழம்பு என் கணவருக்கு ரொம்ப பிடித்த உணவாகி விட்டது. அதற்காக எவெரி வீக் அதே பண்ணுனு சொன்னா என்ன நியாயம்? :)

அன்புடன் உமா

அன்பு தங்கை உமா எப்படி இருக்கீங்க?தாங்கள் எனது குறிப்புகளில் ஆர்வம் செலுத்துவதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
லென்டில் சூப்பில் பயன்படுத்தும் பருப்பு பார்ப்பதற்கு தோலுடன் தட்டையாக வெளிர் பச்சை நிறத்தில் அதன் தோலுடன் இருக்கும். இங்கு இதை ஃபிரென்ச் லென்டில் என்றும் அழைக்கின்றார்கள். ஸ்டோரில் பருப்புகள் இருக்கும் பகுதியில் வைத்திருப்பார்கள். வேறு சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்.

உண்மையிலேயே எனது மீன் குழம்பு அறுசுவையில் மிகவும் பாப்புலராகி விட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதை சுவையாக சமைத்து, சுவைத்த உங்களுக்கும் உங்க கணவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்புள்ள மனோஹரி அக்காவிற்கு,

பதில் அளித்ததற்கு மிகவும் நன்றி. தங்களுடைய மீன் குழம்பு மட்டும் அல்ல, மேலும் நிறைய குறிப்புகள் பார்த்து சமைத்து இருக்கிரேன். எல்லாமே மிக மிக நன்றாக இருக்கிறது. என்னுடைய கசின் நியூயார்க்கில் தனியாக இருக்கிராள். அவளுக்கும் இந்த அருசுவை பக்கத்தினை சொல்லி கொடுத்தேன். என் அண்ணி சென்னையில் இருக்கிரார். அவருக்கும் சொன்னேன். இருவருமே தஙகளுடைய குறிப்புகள் நிறைய செய்து பார்த்து அவர்களோட சினேகிதர்களுக்கு சொல்லி இருக்கிரார்கள் :)
ஒருவர்க்கு எத்தனை தெரிந்து இருந்தாலும் அதை மற்றவர்களுக்கு சொல்லாமல் இருந்தால் என்ன ப்ரயோசனம்? உங்களுடைய மற்றும் குறிப்புகள் கொடுக்கும் மற்ற சகோதரிகளுக்கும் என் போன்றவர்களின் நன்றி. ஏன் என்றால் எனக்கு சமையலில் எப்போதும் பெரிய ஆர்வம் இருந்தது இல்லை. என் அம்மா இப்போதும் என்னை டாம் பாய் என்றுதான் கூப்பிடுவாற்கள் :) உங்களுடைய குறிப்புகள் தான் என்னை இன்ஸ்பையர் செய்தது :) என் கணவரும் உஙகளுக்கு இதற்காக நன்றி கூற சொன்னார் :)

அன்புடனும் நன்றியுடனும்

உமா

மனோகரி மேடம் இன்று லெண்டில் சூப் செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.இன்று டின்னர் இந்த சூப்பும் கார்லிக் ப்ரெட்டும் தான். ஹெவியாகவும் இல்லாமல் பசி தாங்கும் அளவுக்கு ஃபில்லிங் ஆகவும் இருக்கிறது.நன்றி மேடம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவிசிவா, இந்த சூப் உங்களுக்கு பிடித்தது மகிழ்ச்சியே, இதைப் போல் நிறைய செய்து ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டு தினமும் உபயோகிக்கலாம். ஒரு வாரமானாலும் சுவைமாறாமல் இருக்கும் உடம்புக்கும் நல்லது தானே.தங்கள் பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி.

இன்றிரவு இந்த சூப் தான் செய்தேன் மேம் .ரொம்ப நல்லா இருந்தது.சாப்பாடு சாப்பிட்ட மாதிரி இருந்தது.சூப்பர்!!

டியர் மேனகா இந்த குறிப்பைச் செய்து பின்னூட்டம் அளித்ததற்கு மனமார்ந்த நன்றி.

மனோ மேடம், முதல் முறையாக உங்களிடம் பேசுகிறேன். ரொம்ப நாளா நான் silent ரீடர். இப்போதான் கொஞ்ச நாளா கொஞ்சம் feedback போடறேன். உங்கள் குறிப்புகள் எல்லாம் அருமை மேம்.
நான் பியூர் vegetarian. சிக்கன் ஸ்டாக் இல்லாமல் இந்த சூப் செய்ய ஆலோசனை சொல்லுங்க plz. நன்றி.