பிரெட்க்ரம்ஸ் புரோக்கலி

தேதி: May 4, 2007

பரிமாறும் அளவு: 3-4நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புரோக்கலி - இரண்டு
வெங்காயத்தாள் - நான்கு
பூண்டு - நான்கு
சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி
பிரெட் கிரம்ஸ் - அரைக்கோப்பை
உப்பு - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய்- ஒரு மேசைக்கரண்டி


 

புரோக்கலியை மிகவும் சிறிய பூக்களாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டை நசுக்கி வைக்கவும்.
வெங்காயத்தாளை வெள்ளைப் பகுதியையும் சேர்த்து நீளதுண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு நாண்ஸ்டிக் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி அதில் சில்லி ஃபிளேக்ஸையும் பிரெட்க்ரம்ஸ்ஸையும் சேர்த்து சிவக்க வறுத்து தனியே வைக்கவும்.
பிறகு மீதியுள்ள எண்ணெயை ஊற்றி காயவைத்து பூண்டு, வெங்காயத்தாளைப் போட்டு வதக்கவும். அதைத்தொடர்ந்து புரோக்கலியைப் போட்டு நன்கு வதக்கி ஒரு கரண்டி தண்ணீரை தெளித்து உப்பைத்தூவி வேகவிடவும்.
ஐந்து நிமிடம் கழித்து தண்ணீர் சுண்டியவுடன் நன்கு கிளறிவிட்டு வறுத்து வைத்துள்ள பிரெட் க்ரம்ஸ்ஸைத்தூவி இறக்கி விடவும்.
சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோ மேம் ரொம்ப நன்றாக் இருந்தது. நேற்று செய்தேன். என் குழந்தக்ள் ரொம்ப விரூம்பி சாப்பிட்டங்க. நன்றி.

மேம் எனக்கு கல் தோசை & செட் தோசை ரெசிப்பி & வித்யாசம் இது டைம் கிடைக்கும் போது தாங்க. நான் உங்க ரெசிப்பி எப்பவும் செய்வேன். ரொம்பவும் ஸிம்பிளா கரெக்டா வருகிறது, அதனால் எப்பவும் உங்க ரெசிப்பிகளை பார்த்து சமைப்பேன்.

ஹலோ மனோ மேம்,
பிரெட்க்ரம்ஸ்,சில்லி ப்ளேக்ஸ் எப்படி இருக்கும்?படம் இருந்தால் காட்டவும்
கவிதா

kavitha

என் சமையல் குறிப்பை எப்படி அனுப்புவது????

இது புது சுவை புது ரெசிபியா இருந்தது நல்ல சூடா சாப்பிட அருமையா இருக்கு என் பையன் முதலில் வாங்கவேமாட்டேனுட்டான்,ஒரே ஒருதடவை டேஸ்ட் பார்த்து சொல்லு என்று கஷ்டபட்டு வாயில் வைத்தேன்,பிறகு அவனே இன்னும் வேணும் என்று வாங்கி சாப்பிட்டான்,ரெம்ப நல்லா இருந்தது-

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நன்றி ரேணுகா இந்த குறிப்பைச் செய்து குழந்தைக்கும் கொடுத்தது மகிழ்ச்சியைத் தந்தது.என்னால் இன்னும் என் மக்களை காய்கறிகள் சாப்பிட வைப்பதில் எனக்கு தோல்விதான்.அன்பான பின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றி.

சூப்பர் மனோகரி ஆன்டி!!! எப்படி இப்படி ??!!! உங்க "சமைத்து அசத்தலாம் டைமில வாங்கியது பிரெட்க்ரம்ஸ்... இப்பதான் முடிந்தது. ரொம்ப அருமை.. நான் வெறுமே யோகர்ட் வைத்து லஞ்சுக்கே சாப்பிடுறேன் . அருமையான குறிப்பு. இன்னும் உங்க எல்லா ஃப்யூஷன் ரெசிபியெல்லாம் செய்யனும் அதுக்கு நேரமும் முயற்சியும் நான் எடுக்கனும்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் நேற்று செய்ததினால் உங்களுக்கு சொல்கிறேன். நிங்க டார்கெட்,பிட்சாஹட் போன்ற் இடத்தில் பார்த்து இருப்பிங்க என்று நினக்கிறேன். அங்கு ஒரு சின்ன பாக்கெட்டில் குடுப்பார்கள். மேல் தூவதற்க்கு. அது சிகப்பு கலரில் வற்றல் மிளகாயில் உள் இருக்கும் விதை போன்று ஒன்றிரனாக் உடைந்து இருக்கும். ப்ரெட்க்ரம்ஸும், சில்லி ப்ளேக்ஸ் எல்லா க்ரொசரி கடையிலும் கிடைக்கும் ப்ரெட்க்ரம்ஸ் என்று தனியா ஒரு ட்ப்பாவில் கிடைக்கும். அதில் நிறய்ய ப்ளேவர்ஸ் இருக்கு. ட்ரை பண்ணி பாருங்க. மீதி மனோ மேம் சொல்வாங்க.

ஹலோ அருண்கவி பிரெட்கிரம்ஸ் என்பது பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்து அதை தூளாக்குவது. அதை வீட்டிலும், கடையில் ரெடிமேடாகவும் வாங்கி பயன்படுத்தலாம்.சில்லி ஃபிளேக்ஸ் என்பது வேறொன்றுமில்லை காய்ந்த மிளகாயை அப்படியே நொருக்கி பயன்படுத்துவது, இதையும் ரெடிமேடாகவும் வாங்கி பயன்படுத்தலாம்.இதன் படம் யாரும்சமைக்கலாமில் இத்தாலியன் பாஸ்டா என்ற என்னுடைய குறிப்பில் இடம்பெற்றிருக்கின்றது. http://www.arusuvai.com/tamil/node/4615 முடிந்தால் அதை பார்வையிடவும் நன்றி.

ஹலோ விஜி இந்த புரோக்கலி ரெஸிப்பியை செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு எனது நன்றி. குழந்தைகளும் விரும்பி உண்டது மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் அருண்கவி அவர்களுக்கு மிகவும் தெளிவாக உடனே வந்து பதில் அளித்தமைக்கும் எனது நன்றி.நீங்கள் கேட்டிருந்த தோசை ரெஸிப்பிகளை கூடிய விரைவில் தருகின்றேன். நீங்க கூறியதுப் போல் குறிப்புகள் மிகவும் சிம்பிலா இருப்பதைத் தான் நானும் விரும்புவதால் எளிமாக ஆனால் வெரைட்டியாகத் தான் சமைப்பேன். சமீபத்தில் வீடு வாங்கியுள்ளதால் அதில் கொஞ்சம் பிஸியாக இருக்கின்றேன் உங்களுக்குத் தான் தெரியுமே,நீங்க புது வீட்டில் வந்து செட்டில் ஆகியாச்சா?நன்றி.

ஹலோ விஜி நீங்க கேட்டிருந்த கல்தோசை & செட் தோசை குறிப்புகளை கொடுத்துள்ளேன்,இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் அதில் சேர்க்கப்படும் பொருட்களில் உள்ள ஒரு சில வேரியேஷன் மற்றும் அவைகளின் சுவை,நிறம்,டெக்க்ஷர். மேலும் கல் தோசைக்கு மாவை அரைத்தவுடனே வார்க்கலாம்,ஆனால் செட் தோசைக்கு நன்கு புளிக்கவிட்டு தான் சுடவேண்டும்.செய்துபார்த்து விட்டு ரிஸல்டை கூறவும் சரியா நன்றி.

தாங்ஸ் மேடம். எனக்கு இந்த இரண்டுக்கும் உள்ள வித்யாத்தை சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இந்த சாதம் சேர்பதற்க்கு பதில் வேறு என்ன சேர்க்கலாம். கண்டிப்பா அது சேர்த்துதான் செய்ய வேண்டுமா?
இந்த வாரம் செட் தோசை செய்யலாம் என்று இருக்கேன்.

மேம் எனக்கு உங்களை காண்டாக்ட் செய்ய முடியுமா? நான் அஸ்மா அவங்கிட்ட் உங்க ஐடி கேட்டுள்ளேன்.உங்ககிட்டே கேட்டு தருகிறேன் என்று சொல்லியிருக்காங்க. .

நிங்க பிஸி புது வீடெல்லாம் செட் பண்ணியாச்சா? உங்க ரெசிப்பி எல்லாம் இப்ப வருவதில்லேயே. இங்கு அரிசி கிடைப்பது இல்ல இட்லி செய்வதற்க்கு ஏதாவது ஐடியா சொல்லுங்க. இங்கு புழுங்கல் அரிசி கிடையவே கிடையாது. ஜாச்மின் அரிசி தான் கிடைக்குது. அங்கு கிடைக்கிறதா? ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க. டைம் கிடைக்கும் போது போதும்

நன்றி

ஹலோ விஜி கட்டாயம் செட் தோசை செய்து பார்க்கவும், அதில் சாதம் சேர்த்து அரைப்பதனால் மாவில் புளிப்பு சுவை கூடும் மற்றும் தோசை மெத்தென்றும் இருக்கும். அரிசியை பொருத்தவரையில் நீங்கள் இருக்கும் பகுதியில் safe way ஸ்டோர் இருந்தால் அதன் பிரான்ட்டில் long grain white rice மற்றும் அதே பிரான்டில் parboiled புழுங்கலரிசியை வாங்கி தோசை இட்லி ஆப்பம் போன்றவற்றை செய்து பார்க்கவும் ரொம்ப நன்றாக வரும்.
நான் இன்னும் புதுவீட்டிற்கு மாறவில்லை ஜூன் இறுதியில் போகலாம் என்றிருக்கின்றேன், வெளி வேலைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை டைகருக்காகத்தான் தயங்குகின்றேன், ஃபென்ஸிங் இல்லையென்றால் அவனை கண்ரோல் செய்யமுடியாது ஆகவே எவ்வளவு நாள் ஆனாலும் எல்லா வேலையும் முடிந்த பிறகே போகலாம் என்று இருக்கின்றோம். மேலும் நீங்க எனது காண்டாக்ட் ஐடியை கேட்டிருந்தீர்கள் மன்னிக்கவும் நான் நமது தளத்தில்கூட யாருடனும் தனிப்பட்ட முறையில் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புவதில்லை பாதுகாப்பு கருதி என்று நினைக்க வேண்டாம், எல்லோரிடமும் ஒரே மாதிரி இயல்பாக பழகுவதை விரும்புகின்றேன் அவ்வளவு தான். இதனால் என் மீது கோபம் ஒன்றும் இல்லையே...

எப்பிடி இருக்கிங்க? நான் ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வந்து இப்ப தான் கொஞ்சம் டைம் கிடைக்கிறது. அது தான் வந்தேன். வீட்டில் மாமனார்&மாமியார் வந்து இருக்கிறார்கள். குழந்தகளுகு வெக்கேஷன் கேட்கவே வேண்டாம். மற்றபடி எனக்கு கோபமே கிடையாது. என்னுடய்ய தோழிக்கு ஒரு பெரிய ப்ரச்னை. அவங்களுக்கா நான் உங்களிடம் கேட்டு சொல்கிறேன் என்று கூறி இருந்தேன். அதனால் தான். அவங்க இப்ப தான் கல்யானமாகி வந்து இருக்காங்க. நான் உங்களின் நிறிய்ய பதிவுகளின் அட்வைஸ்/ அறிவுரகள் கூறியிருந்ததை பார்த்து தான் அவங்களுக்கு நான் சொன்னேன். நிங்கள் புது வீட்டிற்க்கு போயாச்சா/ டைகர் கூட தான் இப்ப நிங்க பிசி யா ஏன் அருசுவை பக்கம் காணவில்லை.இங்கு மேம் இப்ப ஜாஸ்மின் லாங்க் க்ரேன் அரிசி/ பார் பாய்ல்ட் அரிசி கிடைக்கிறது. ஆனால் ரொம்ப ஸ்டார்சா இருக்கு.அதுதான் சரியா வருமோ என்று உங்களிடம் கேட்டேன். ரொம்ப நன்றி மேடம்.

ரெசிப்பி தாங்க மேடம் எப்ப டைம் கிடக்கிற்தோ அப்ப தாங்க. அவசரம் ஒன்றும் இல்லை. உங்க புது விட்டு வேலைகள் முடிந்ததா?

ஹலோ விஜி எப்படி இருக்கீங்க? வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க? உங்க பதிவை இதற்கு முன்பே பார்த்தேன் பதில் எழுதத்தான் அவகாசம் கிடைக்கவில்லை, நிச்சயம் நீங்க கேட்டிருக்கின்ற ரெஸிபிக்களை தருகின்றேன் எழுதியப் பிறகு உங்களுக்கு தெரிவிக்கின்றேன் ஒகே. புது வீட்டிற்க்கு ஜூன் மாதமே மாறிவிட்டோம் கட்டி முடிக்கப்பட்ட வீடு தான் வாங்கினோம், அடிக்கடி மழை பெய்துக் கொண்டிருந்ததால் வெளி வேலைகள் தான் முற்றுப் பெறாமல் இருந்தது அதில் இன்னும் ஒரு வேலை தான் பாக்கி,விசாரித்ததற்கு மிக்க நன்றி டியர்.

hello madam(akka)

last one week im waiting for u,this is the first time im talkin with u,but i read all ur suggestions,recipes.

i have a problem that my son 3 years old 3 weeks back he started preschool,first few days he was ok in the school(9 to 12),after that he started cryin and he said he wanna mommy it continues 2 for weeks,every day i got a call from the school around 10 am that they asked me to take him home.then i told him all the school stories and i said mommy will be back at 12pm and take u home like that. then in the next morning he said iwant to go to schook i want to wear this dress and this shoes and all,first one hr he was ok ater that he start crying,the the scholl admin said we'll give some break and we'll start again september,and they advise me to keep some distance from him(he's very attached with me) after that he's very admenet,he wants be with me alwaaaaaaaaaaays,idono what to do
(sorry for this long mail)

ஹலோ jayanthivinay எப்படி இருக்கீங்க? தாமதமான பதிலுக்காக வருந்துகின்றேன்.நீங்க கூறியுள்ள விசயம் பொதுவாக எல்லா பெற்றொர்களும் எல்லாக் குழந்தைகளும் சந்திக்கின்ற ஒரு அனுபவம் தான் ஆகவே நீங்கள் இதைப் பற்றி கவலைப் பட தேவையில்லை. குழந்தைகளுக்கு கால அவகாசத்தை கணக்கிட முடியாது என்பதால் அம்மாவை விட்டு பிரிந்திருக்கும் ஒரு நிமிடம் கூட ஒரு யுகமாக இருக்கும்.அதை குழந்தைகளால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது அதைச் சொல்லவும் தெரியாது என்பதை நாம் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.எல்லாக் குழந்தைகளுமே புதியச் சூழ்நிலையைப் பார்த்ததும் பயந்து அழுவார்கள்.சில குழந்தைகள் மிக விரைவில் அந்த சூழ்நிலையை ஏற்றுக் கொண்டு அமைதியாகி விடுவார்கள், சில குழந்தைகளுக்கு அதிக காலம் பிடிக்கும்,அதற்காக அம்மாவேண்டும் என்று அழும் குழந்தையை தேற்றாமல்,வீட்டிற்கு அழைத்துப் போகும்படி பள்ளியிலிருந்து அழைப்பு வருவது ஏற்புடையது அல்ல. ஆகவே பிரச்சனை உங்க குழந்தைக்கு அல்ல நீங்கள் சேர்த்திருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கு தான். ஆகவே முடிந்தால் வேறொரு ஸ்கூலுக்கு மாற்றி குழந்தையை அங்கு அனுப்பிபாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும். என்னைப் பொருத்தவரையில் குழந்தையின் மனநிலைதான் முக்கியம் மற்றபடி ஸ்கூல் படிப்பு எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.இந்த லிங்கில் http://www.arusuvai.com/tamil/forum/no/4429 இன்னும் நிறைய விபரங்கள் இருக்கின்றது பார்க்கவும்.படித்து மேலும் சந்தேகம் இருந்தால் கேட்கவும் நன்றி.

நேற்று டின்னரில் இந்த ஐட்டமும் செய்து இருந்தேன். நன்றாகவே இருந்தத். என் ஹஸ்ஸுக்கு ரொம்ப பிடிக்குமாதலினால் இந்த டிஸ் செய்து இருந்தேன். அப்பப்ப இதே மாதிரி குழந்தைகளுக்கும் செய்து குடு என்றார். உங்களுக்கு தான் நன்றி...

நன்றி விஜி.உங்க டின்னர் டேபுளை எனது ரெஸிபியும் அலங்கரித்தது கேட்க மகிழ்ச்சியாக இருந்தது, பின்னூடடத்திற்கு மிக்க நன்றி.

மனோகரி ஆண்டி,
இன்று இந்த புரோக்கலியை செய்தேன்.நன்றாக இருந்தது.

நன்றி கீதா,உங்க குழந்தை எப்படி இருக்காங்க? புகைப்படத்தில் பார்த்ததாக ஞாபகம்.இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தது மகிழ்ச்சியே, பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி.

எனக்கு கச்சான் பிஸ்கட் எப்படி செய்வது என்று கூற முடியுமா?

ஹலோ அம்பிகாதேவி கச்சான் என்பது வேர்கடலை தானே?சமையல் குறிப்பை எப்படி அனுப்புவது என்பதைக் குறித்து நமது தளத்தின் முகப்பில் கேள்வி பதில் வடிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.உங்களுக்காக அதன் லிங்கை கொடுத்துள்ளேன் தயவுச் செய்து பார்வையிடவும்.நன்றி.
http://www.arusuvai.com/tamil/forum/no/3285