பொரிச்ச சோறு

தேதி: May 4, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேகவைத்த சாதம் - மூன்று பேருக்கு
உருளைக்கிழங்கு - இரண்டு
தக்காளி - மூன்று
மாசிதூள் - ஒரு கோப்பை
மிளகாய்தூள் - இரண்டு கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - மூன்று கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கிழங்கு மிளகாய்தூள், மஞ்சள்தூள் போட்டு பொரிக்கவும்.
பின் அதனுடன் தக்காளியை போட்டு வதக்கி சாதத்தை போட்டு கிளறவும். நன்கு கிளறி கடைசியில் மாசி தூளை போட்டு எல்லாப்பக்கமும் சேர்த்து பிரட்டி சூடாக பரிமாறவும்.


முதல் நாள் சாதம் மீதம் இருந்தாலும் இப்படி செய்யலாம்

மேலும் சில குறிப்புகள்