பட்டர் மில்க் பேன் கேக்ஸ்

தேதி: May 5, 2007

பரிமாறும் அளவு: 5நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - ஒன்றரை கோப்பை
மைதா - கால் கோப்பை
பிரவுன் சுகர் - இரண்டு மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
பேக்கிங் சோடா - அரைத்தேக்கரண்டி
உப்புத்தூள் - அரை தேக்கரண்டி
முட்டை - இரண்டு
கெட்டியான மோர் - இரண்டு கோப்பை
ஆலிவ் ஆயில் - கால் கோப்பை


 

ஒரு பெரிய கோப்பையில் மாவுகளை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடர், சோடா, சர்க்கரை, உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
முட்டையை நன்கு நுரைக்க அடித்து அதனுடன் எண்ணெய் மற்றும் மோரை ஊற்றி நன்கு கலக்கி மாவுக் கலவையில் ஊற்றி இலேசாக கலக்கவும்.
பின்பு அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து அனலை நிதானமாக வைத்து மாவுக்கலவையிலிருந்து சிறு சிறு தோசைகளாக ஊற்றி இரண்டு புறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.
இந்த சுவையான பேன் கேக்குகளை பிடித்தமான பழங்கள் மற்றும் பழசாஸ்ஸுகளுடன் காலை உணவாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் மனோகரி அக்கா எப்படி இருக்கீங்க? உங்க பேன் கேக் செய்து பார்த்தேன் ரெம்ப நல்லா வந்தது கோதுமை மாவு மட்டும் யூஸ் பண்ணினேன் ரெம்ப நல்லா இருந்தது தேங்ஸ் என்னுடைய கிட்ஸ் சொன்னாங்க ரெம்ப நல்லா இருந்ததுன்னு அவங்க நல்லா சாப்பிட்டாலே அவார்டே கிடைத்த மாதிரி தான் தேங்ஸ் அக்கா

நன்றி சுவேதா இந்த குறிப்பை செய்து, குழந்தைகளுக்கும் அது பிடித்திருந்தது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.கோதுமையில் செய்ததுப் போல் வெறும் மைதாவிலும் செய்து பாருங்கள் அதுவும் சுவையாக இருக்கும். பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.

ஹாய் மனோகரி அக்கா மைதா உடலுக்கு நல்லது இல்லை வெயிட் போடும் அதனால் நான் வாங்கவே மாட்டேன் தேங்ஸ் அக்கா

அன்பின் மனோகரி மேம், மிகவும் சுவையான பான் கேக்.நான் இதற்கு unbleached all purpose flour சேர்த்தேன். நாங்கள் சைவம் ஆதலால் முட்டை சேர்க்கவில்லை.
இதனை சும்மாவும் மற்றும் வாழைப்பழ துண்டுகளும் சேர்த்து செய்தேன். (ஒவ்வொரு முறையும் கிடைக்கும் பழங்கள் சேர்ப்பேன். இம்முறை வாழை) மிகவும் சுவையாக இருந்தது. நன்றி
-நர்மதா :)
பி.கு: அப்ப செய்தது இப்பதான் நேரம் கொஞ்சம் கிடைத்து அடுத்தடுத்து பின்னூட்டமிடுகிறேன். குறை நினைக்க வேண்டாம்.

திருமதி. நர்மதா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த பான் கேக்கின் படம்

<img src="files/pictures/aa77.jpg" alt="picture" />