சுண்டைக்காய் பொரியல்

தேதி: May 5, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுண்டைக்காய் - 1/4 கிலோ
சின்னவெங்காயம் - 100 கிராம்
துருவியதேங்காய் - ஒரு மூடி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சைமிளகாய் - இரண்டு
பெருஞ்சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - மூன்று கரண்டி
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்


 

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி உப்பு கலந்த தண்ணீரில் போட்டு நன்கு கழுவவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருஞ்சீரகத்தூள், உப்பு எல்லாம் போட்டு கிளறி சுண்டைக்காயையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெந்ததும் கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்


இது எல்லா வகை உணவுடனும் சாப்பிட நன்றாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்