மட்டன் வெள்ளை குருமா

தேதி: May 5, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

அறுசுவையில் இஸ்லாமிய உணவுக் குறிப்புகள் வழங்கிவரும் <a href="experts/620" target="_blank"> திருமதி. ரஸியா </a> அவர்கள் வழங்கிய குறிப்பு இது. இஸ்லாமிய வீடுகளில் விஷேச தினங்களில் செய்யப்படும் இந்த வெள்ளை குருமாவை நெய் சோறு, பரோட்டா, நாண், சப்பாத்தி இவைகளோடு சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

 

ஆட்டுக்கறி - ஒரு கிலோ
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
ஜீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாப்பொடி - ஒரு தேக்கரண்டி
இஞ்சிப்பூண்டு விழுது - ஒரு மேஜைக்கரண்டி(குவியலாக)
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 5
ஏலம் - 5
தயிர் - 200 மில்லி
மல்லி, புதினா - ஒரு பிடி
தேங்காய் - பாதி மூடி
கசகசா - 2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 8
எண்ணெய் - ஒரு மேஜைக்கரண்டி
வெண்ணெய் (அ) நெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
எழுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி


 

முதலில் கசகசாவை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். பின்பு முந்திரியை அதில் இட்டு அரைக்கவும். அதன் பின்னர் தேங்காய் துருவலை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கவும். தக்காளி, மல்லி, பொதினா ஆகியவற்றையும் நறுக்கி வைக்கவும்.
பின்பு குக்கரில் எண்ணெய், வெண்ணெய் இரண்டையும் ஒன்றாய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு ஆகியவற்றை போட்டு வெடிக்கவிடவும்.
அதன் பிறகு நறுக்கின வெங்காயத்தைப் போட்டு நிறம் மாறும்வரை வதக்கவும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயில் பாதியையும், நறுக்கின தக்காளி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள இறைச்சியைப் போட்டு வதக்கவும். லேசாக வதக்கிய பின்பு அனைத்து மசாலாப்பொருட்களையும் அதில் சேர்க்கவும்.
மசாலாவை சேர்த்து நன்கு கிளறிவிட்டு பின்னர் தயிரை ஊற்றவும்.
அனைத்தையும் ஒன்று சேர கிளறி பின்னர் அதில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து மூடி வெயிட் போட்டு 20 நிமிடங்கள் வேகவிடவும்.
20 நிமிடங்களுக்கு பின்பு திறந்து, அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
இனி தீயை குறைத்து வைத்து வேகவிடவும். மேலும் மீதமுள்ள பச்சை மிளகாயையும் சேர்க்கவும். குருமா திரண்டு வரும் தறுவாயில் எழுமிச்சை சாற்றை ஊற்றவும்.
மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு பின்னர் இறக்கவும்.
இப்போது சூடான, சுவையான மட்டன் வெள்ளை குருமா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

i tried this menu and it worked out well.my brothers liked it very much .thank you very much for this receipe.

thyagu

நலமா?என்னுடைய சமையல் குறிப்பை செய்து பார்த்து நன்றாக இருந்ததாக தெரிவித்திருந்தீர்கள் மிக்க நன்றி!

hello rasia iam fine hope u too.please post if you have any different vegeterian menus(since iam an vegeterian).

thyagu

நாங்களும் நலமே!சைவ பிரியரான தங்களுக்கு கூடிய விரைவில் சைவ குறிப்போடு சந்திக்கிறேன்,மிக்க நன்றி!

ரஸியாக்கா உங்க மட்டன் வெள்ளை குருமாவை மட்டன் பதிலாக சிக்கன் சேர்த்து செய்துப்பார்த்தேன் .சூப்பரா இருந்தது.என் ஹஸ்க்கு ரொம்ப்ப பிடித்து இருந்தது.அக்கா வீட்டுக்கு போனபோது மட்டனில் செய்தேன்.அக்கா,மாமா,பிள்ளைகள் எல்லோருக்கும் ரொம்ப பிடித்து இருந்தது.ரொம்ப தேங்க்ஸ்க்கா.

எப்படி இருக்கீங்க?குட்டிப்பெண் என்ன சொல்கிறாள்?அக்கா வீட்டுக்கு போய் வந்தாச்சா?மட்டன் வெள்ளை குருமா நன்றாக இருந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி! உங்க ஹஸ்,மற்றும் அக்கா, பிள்ளைகள் எல்லோருக்கும் பிடித்து இருந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி!செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியது இன்னும் மகிழ்ச்சியும்,இன்னும் குறிப்புகள் குடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது,மிக்க நன்றி மேனகா!