உடனடி பால் கொழுக்கட்டை

தேதி: May 8, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் - 10 துண்டுகள்,
தேங்காய் பால் - 2 கப்,
பால் - 1 கப்,
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்,
சர்க்கரை - 1 கப்,
கோவா - 50 கிராம்,
ஏலக்காய் - 4,
கேசரி பவுடர் - சிறிது,
ஆப்பிள் கிரீன் கலர் - சிறிது.


 

ப்ரெட்டின் ஓரத்தை பிய்த்து விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து, தேங்காய் பால் தேவையான அளவு விட்டு கெட்டியாக பிசையவும்.
மீதி தேங்காய்ப்பால், பால், சர்க்கரை, கோவா, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கி வைக்கவும்.
பிசைந்த ப்ரெட் கலவையை இரண்டாக பிரித்து, ஒவ்வொன்றிலும் ஒரு கலர் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பாலில் போட்டு பிரிஜ்ஜில் வைத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

how are u? உங்களின் குறிப்புகள் அனைத்தும் மிகவும் எளிதாகவும் ருசியாகவும் உள்ளது.உங்களின் குறிப்புகளை நிறைய செய்து பார்த்து பாராட்டுகள் பல வாங்கி இருக்கிறேன். இந்த பால் கொழுக்கட்டையில் அதிக fat content இருக்கும் போல அதனால் தேங்காய் பால் சேர்க்காமல் செய்யலாமா? தேங்காய் பால் சேர்க்காமல் செய்தால் சுவையில் மாறுதல் ஏற்படுமா?
நன்றி

அன்பு சகோதரி மூன் (ஜான்சி),
நலமா? வாழ்த்துக்கள். உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. தேங்காய் பால் சேர்க்காமலும் செய்யலாம், தவறில்லை. சுவை சிறிது தான் மாறுபடும். பாலை பாதியாக சுண்ட காய்ச்சிய பின் செய்தால் சரியாக இருக்கும். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? வீட்டில் உள்ளவ்ர்கள் அனைவரும் நலமா? உடனே என் சந்தேகத்தை தெளிவு செய்ததற்கு நன்றி. நான் இதை இன்றே செய்ய போகிறேன் செய்து விட்டு உங்களுக்கு பதில் அனுப்புகிறேன். உங்களின் நிறைய recipe நான் செய்து பார்த்து விட்டு என் தோழிகளுக்கும் செய்து பார்க்க சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு எவ்வளவு நாள் சமையலில் அனுபவம் மேடம்.
நன்றி

நானும் எங்கள் வீட்டில் அனைவரும் நலமே. தங்களின் அன்பு விசாரிப்புக்கு நன்றி. நீங்கள் எப்படியுள்ளீர்கள்? எனக்கு கொஞ்சமாக 25 வருடங்கள் தான் அனுபவமுள்ளது. இருந்தும் சமையல் எனக்கு புதிது போல தான் உள்ளது. நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.