திடீர் புளி சாதம்

தேதி: May 8, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சாதம் - 3 கப்,
புளி - ஒரு எலுமிச்சை அளவு,
காய்ந்த மிளகாய் - 5,
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்,
சிறிய வெங்காயம் - 10,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்.


 

புளியை 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டவும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். மிளகாயை கிள்ளி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து சிவந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கரைத்த புளியை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து
கொதிக்க விடவும்.
புளி பச்சை வாசனை போய், நன்கு கொதித்ததும், சாதம் சேர்த்து கிளறவும்.
சாதம் நன்கு வதங்கியதும் இறக்கவும்.


மீந்து போன சாதத்திலும் செய்யலாம். வெங்காய ருசியோடு வித்தியாசமாக இருக்கும் இந்த புளிசாதம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பின் செல்வி அக்கா, இதை சனிக்கிழமை மதியத்துக்கு செய்தேன். ஜாஸ்மின் அரிசியில். சுவையாக இருந்தது. வழக்கமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் எனது மாமியார்தான் புளிச்சாதம் செய்வார்கள். இம்முறை நான் செய்தேன். சாதம் சிறிது குழைந்துவிட்டது. ஆனாலும் நன்றாகவே இருந்தது.
-நர்மதா :)

அன்பு நர்மதா,
சாதம் குழைந்தாலும் நன்றாக இருக்கும். அரிசி வகை அப்படி. நீ என்ன பண்ணுவாய்? சுலபமாக செய்யலாம். பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.