ஜவ்வரிசி புட்டு

தேதி: May 9, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

நைலான் ஜவ்வரிசி - 200 கிராம்
பச்சரிசி மாவு - அரை கப்
தேங்காய் - ஒரு மூடி
சீனி - 100 கிராம்
ஏலக்காய் - 3
உப்பு - கால் தேக்கரண்டி


 

பச்சரிசியில் தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி தண்ணீரை வடித்து விட்டு வெயிலில் உலர்த்தவும். பின்னர் அதை மிஸினில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த மாவை வெறும் வாணலியில் போட்டு வறுத்து நிறம் மாறுவதற்கு முன் எடுத்து விடவும். இது ஒரு வருடம் வரை வீணாகாமல் இருக்கும். தேங்காயை துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊற வைத்து விடவும். உடனே செய்ய வேண்டும் என்றால் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து அதில் ஜவ்வரிசியை போட்டு அரை மணிநேரம் ஊற வைத்து செய்யவும்.
மறுநாள் ஊற வைத்த ஜவ்வரிசியை எடுத்து தண்ணீரை வடித்து விட்டு, ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஜவ்வரிசியுடன் உப்பு, தயாரித்து வைத்திருக்கும் அரிசி மாவு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
ஒரே அளவிலான 5 சிறிய கிண்ணங்கள் அல்லது சிறிய டம்ளர்களை எடுத்துக் கொள்ளவும். கிண்ணத்தில் நெய் தடவி முதலில் தேங்காய் துருவலை கால் பகுதி அளவு வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் கலந்து வைத்திருக்கும் ஜவ்வரிசியை முக்கால் பகுதி வைத்து அதன் மேலே மீண்டும் கால் பகுதி தேங்காய் துருவலை வைக்கவும். இதே போல 5 கிண்ணங்களிலும் ஜவ்வரிசி கலவை மற்றும் தேங்காயை வைத்துக் நிரப்பவும்.
இட்லி பானையில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடுப்படுத்தவும். அதில் இட்லி தட்டை வைத்து ஜவ்வரிசி, தேங்காய் கலவை நிரப்பிய கிண்ணங்களை வைக்கவும்.
இட்லி பானையை மூடி வைத்து 8 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் வெந்த ஜவ்வரிசி புட்டை எடுத்து ஒரு தட்டில் கவிழ்த்து அதனுடன் மீதமுள்ள தேங்காய் துருவல், சீனி மற்றும் பொடி செய்து வைத்திருக்கும் ஏலக்காய் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
சுவையான ஜவ்வரிசி புட்டு தயார். தேவைப்பட்டால் முந்திரியை நெய்யில் வறுத்து அதனுடன் சேர்த்து பரிமாறலாம். சமையல் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த திருமதி. ராஜகுமாரி சச்சிதானந்தம் அவர்கள் இந்த சுவையான ஜவ்வரிசி புட்டினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

dear rajakumari,

nice to hear a new variety,...pls. can u give me the receipe to make normal " kuzai puttu ".

moreover iam in dubai. here can i get neylon jevarisi. how it looks like? how v have to purchase. please reply to my doubts.

thanks
regards
revraj12

திருமதி. ராஜகுமாரி அவர்கள் இணையத்தை பயன்படுத்துபவர் அல்ல. அதனால் அவர் தங்களின் இந்த பதிவை பார்ப்பது கடினம். உங்களின் பின்னூட்டம் பற்றி அவருக்கு நாங்கள் தெரிவித்துவிடுகின்றோம்.

நைலான் ஜவ்வரிசி என்பது சாதாரண ஜவ்வரிசியை விட மிகவும் சிறியதாக இருக்கும். குறைந்த நேரத்தில் வெந்துவிடும். சிறிது நேரம் வேக வைத்தாலே வெந்து மாவு போல் ஆகிவிடும். இந்த சிறிய வகை நைலான் ஜவ்வரிசிதான் புட்டு செய்வதற்கு உகந்தது. நைலான் ஜவ்வரிசி என்ற பெயர் எதனால் வந்தது என்பது தெரியவில்லை. சிறிய ரக ஜவ்வரிசியை பார்த்து வாங்கி உபயோகிக்கலாம்.