பலாப்பழப் பொங்கல்

தேதி: May 10, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இதற்கு முந்தைய குறிப்பில் தயாரிக்கப்பட்ட பலாப்பழக்கூழின் மறு பாதி,
பச்சரிசி- முக்கால் கப்
பயித்தம்பருப்பு- கால் கப்
தண்ணீர்-2 கப்
பால்- அரை கப்
நெய்- கால் கப்
குங்குமப்பூ- ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல்- அரை கப்
உலர்ந்த திராட்சை-1 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு- 1 மேசைக்கரண்டி


 

அரிசியையும் பருப்பையும் கழுவி தண்ணீரையும் பாலையும் சேர்த்து ப்ரெஷர் குக்கரில் 6 விசில்கள்வரை வேகவைக்கவும்.
ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
அதில் முந்திரியையும் திராட்சையும் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
தேங்காய்த்துருவலையும் சேர்த்து சிறிது நேரம் நெய்யில் வதக்கவும்.
வெந்த சாதம், குங்குமப்பூ, பலாக்கூழ் சேர்த்து சிறு தீயில் எல்லாம் ஒன்று சேரும்வரை கிளறி இறக்கவும்.


தேவையானால் மேலும் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்