கொடுவா மீன் வறுவல்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொடுவா மீன் - சிறியதாக இரண்டு மீன்
எலுமிச்சம் பழம் - 2
இஞ்சி - 5 கிராம்
நல்லெண்ணெய் - 5 மில்லி
உப்பு - தேவையான அளவு
சீரகம் - தேவையான அளவு
மைதா - 10 கிராம்


 

கொடுவா மீனை நன்றாக வெட்டி மென்மையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
எலுமிச்சம்பழம், நல்லெண்ணெய், இடித்த இஞ்சி, உப்பு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாய் கலந்து கொள்ள வேண்டும்.
மசிக்கப்பட்ட மீனை லேசாக மைதாமாவில் புரட்டி எடுத்த பிறகு எலுமிச்சக் கலவையில் நன்றாக முக்கி எடுத்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து மீனை இரண்டு பக்கமும் நன்கு சுடவைத்தால் போதும்.
கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதன் மீது எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்